Tuesday , June 19 2018


கோவை ஜெம் மருத்துவமனையில் குடலிறக்க வெள்ளிவிழா நிகழ்ச்சி
கோவை ஜெம் மருத்துவமனையில் 25- வருட லேப்பிராஸ்கோப்பி ஹெர்னியா அறுவை சிகிச்சையின் வெற்றி பயணத்தை முன்னிட்டு வெள்ளவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமை விருந்தினராக அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.

விழாவில் வேதநாயகம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். எஸ்.வி.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டிஎம்எல்ஏகள் முன்னிலை வகித்தனர். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஹெர்னியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஹெர்னியா பற்றிய தமிழ் மற்றும் ஆங்கில விழிப்புணர்வு புத்தகத்தை டாக்டர். பழனிவேலு வெளியீட்டு அதை அமைச்சர் எஸ். பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்த கண்காட்சியில் குடலிறக்கத்தின் பல்வேறு வகைகள், அதற்கான அறிகுறிகள் மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சை முறைகள் பற்றிய விளக்கப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களின் சந்தேகங்களை ஜெம் மருத்துவர்கள் நேரடியாக கலந்துரையாடி தீர்த்து வைத்தார்.

லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக கருதப்படுவது 3D தொழில் நுட்ப முறையாகும். இந்த 3D தொழில்நுட்பத்தின் மூலம் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தால் கடினமாக அறுவை சிகிச்சையை துல்லியமாக பார்த்து எளிதாக செய்யலாம்.

ஜெம் மருத்துவமனையில் லேப்பிராஸ்கோப்பி குடலிறக்க அறுவை சிகிச்சை 3D தொழில் நுட்பத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு காணொலி மூலம் தமிழ் விளக்கப்படமாக காண்பிக்கப்பட்டது.

ஜெம் மருத்துவமனையில் லேப்பிராஸ்கோப்பி குடலிறக்க அறுவை 3D தொழில் நுட்பத்தின் காணொலி மூலம் டாக்டர். பி.பிரவீன்ராஜ் , அமைச்சர் எஸ். பி.வேலுமணி மற்றும் பலர்க்கு காணொலி மூலமாக விளக்கமளித்தார்.

இதை பார்த்த மக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

ஜெம் மருத்துவமனை டாக்டர் சி.பழனிவேலு அவர்கள் கூறிகையில்
இந்த கண்காட்சியில் 2500-க்கு மேல் பொதுமக்கள் பங்கு கொண்டு ஹெர்னியா பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாம் மூலம் 200-க்கும் மேற்பட்ட குடலிறக்க நோயாளிகள் சலுகை அடிப்படையில் லேப்பிராஸ்கோப்பி ஹெர்னியா அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பயனடைந்தனர் இவ்வாறு அவர் கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

About Admin

Check Also

புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் மிராக்கில் சத்து பானம் டாக்டர் மாணிக்கம் தகவல்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் விதமாக மிராக்கில் என்ற சத்து பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சக்தி குழுமங்களின் தலைவரும் டாக்டருமான மாணிக்கம் தெரிவித்தார். மேலும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *