Tuesday , September 25 2018
Home / District-News / ஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா

ஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது உதகை மலர்க்காட்சி 2018-யை தொடங்கி வைத்தார்கள்.

உடன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு , மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, மாண்புமிகு சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையத்தின் தலைவர்
அ. மில்லர், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நீலகிரி மாவட்டம் ஆட்சித் தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

122 – வது உதகை மலர்க்காட்சி 2018-யை தொடங்கி வைத்து மலர்களால் உருவாக்கப்பட்ட மேட்டூர் அணை வடிவமைப்பினை பார்வையிட்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் (18.5.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 1850 கோடி ரூபாய் மதிப்பிலான 4 X 125 மெகா வாட் குந்தா நீரேற்று புனல் மின் திட்ட பணிகளை துவக்கி வைத்து, 7.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற 7 திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பொதுப்பணித் துறை சார்பில் 10.85 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

About Admin

Check Also

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பயிலரங்கம், கமல்ஹாசன் பங்கேற்பு

  கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கோவை சுங்க கார்னர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.