Monday , June 25 2018
Home / District-News / கோவையில் 84 வயது முதியவர் உடல் தானம்

கோவையில் 84 வயது முதியவர் உடல் தானம்

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேஷனில் வசித்து வந்த 84 வயது முதியவர் கே.வி.கணபதி என்பவர் இயற்கை மரணம் அடைந்தார்.
இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவர்கள் மூவரும் சேர்ந்து தங்களது தந்தையின் இறுதிக் காலம் நல்ல விதமாக அமைய பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேஷனில் சேர்த்த்திருந்தனர்.

84 வயது மூப்பு அடைந்திருந்த கே.வி.கணபதி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கலாம் மக்கள் அறக்கட்டளை உதவியுடன் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப் பதிவு செய்து வைத்திருந்தார்.

அவர் இறந்ததை அவரது உறவினர்கள் உறுதி செய்து கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் செந்தில் குமார், ஒருங்கிணைப்பாளர் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே துரிதமாகச் செயல்பட்டு இறந்த கே.வி.கணபதி உடலைப் பெற்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சௌந்திரராஜன் அவர்களிடம் உறவினர்கள் முன்னிலையில் தானமாக வழங்கப்பட்டது.

அப்போது மருத்துவர் சௌந்திரராஜன் கூறியதாவது;

ஒருவர் உயிரோடு இருக்கும் வரை இரத்ததானம், சிறுநீரக தானம் செய்கின்றனர். ஒருவர் இயற்கையாகவோ அல்லது விபத்தில் மரணம் அடைந்தாலோ இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் விருப்பப்பட்டால் தானமாக வழங்கலாம். ஒருவர் இறப்பதற்கு முன்பாகவும் தனது உடலைத் தானமாக வழங்க அரசு மருத்துவமனையில் பதிவு செய்து கொள்ளலாம். உலகிலேயே நமது இந்தியாவில் அதிகமாக உடல்தானம் செய்வது தமிழகத்தில் தான் அதுவும் குறிப்பாக நமது கோவையில். கடந்த மூன்றாண்டுகளில் 600 நபர்கள் உடல் தானம் செய்ய பதிவு செய்து உள்ளனர். இதுவரை 60க்குமேற்பட்ட உடல்கள் தானமாகப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. தானமாகப் பெறப்படும் உடல்களை நன்றாக ‘எம்பார்மிங்’ முறையில் பதப்படுத்தி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடற்கூறு ஆய்வு செய்ய பயன்படுத்தப் படுகிறது. ஒருவேளை இறந்த நபரின் உடலைப் பார்க்க உறவினர்கள் வந்தாலும் முறையான அனுமதியுடன் பார்க்க அனுமதிக்கப் படுவார்கள். பல மாதங்கள் கழித்து தானமாக வழங்கிய உடலை உறவினர்கள் மனம்மாறி முறைப்படி இறுதி சடங்கு, சம்பிரதாயங்கள் செய்து நல்லடக்கம் செய்ய விரும்பினால், முறையான அனுமதியுடன் எவ்வளவு நாட்கள் பதப்படுத்தப் பட்டதோ அதற்கான தொகையைச் செலுத்தி விட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் ஒருநபர் இறந்து ஆறுமணி நேரத்திற்குள் அவரது கண், சிறுநீரகம் போன்றவற்றை எடுத்து வேறு ஒரு நபருக்குப் பொருத்திக் கொள்ளலாம். உடல்தானம் செய்ய விரும்பினால் அரசு மருத்துவமனை மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இந்த உடல்தான நிகழ்ச்சிக்கு முழு ஈடுபாடுடன் செயல்பட்ட இறந்தவரின் மகள் திருமதி.மீனாகுமார், பிருந்தாவன் நாராயணன், கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர்,தலைவர் செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, சசிகுமார், சீனிவாசன், விக்னேஷ், லோகேஷ், யுவராஜ், கார்த்திக், காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

Rukmani
Reporter

About Admin

Check Also

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்

சர்வதேச யோகா தினம் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை ஒத்தகால்மண்டபம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா விழிப்புணர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *