Thursday , November 22 2018
Home / District-News / காதுகேளாதோர் அமைப்புகள் சார்பில் மாபெரும் பேரணி

காதுகேளாதோர் அமைப்புகள் சார்பில் மாபெரும் பேரணி

கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 4 சதவீத அரசு வேலைவாய்ப்பு, இலவச வீடு, கல்வி, உதவித் தொகையை ரு.5000-மாக உயர்த்தி வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அஷோக் ஸ்ரீநிதி தலைமையில் பேரணி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக சென்றனர்.

கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது :-

காதுகேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று வலியுத்தி கோவையில் கோவை மாவட்ட வாய் பேச முடியாதோர் மனித உரிமை அமைப்பினர் மனு அளித்தனர்.

அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கடந்த 38 ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்பில் கோவை மாவட்ட காது கேளாதோர்கள் மட்டுமே புறக்கணிக்கப் பட்டு வருகிறார்கள்.

காது கேளாதோர்களில் 70, 80, 90, 100 சதம் காது கேளாதோர் என பல பிரிவினர் உள்ளனர்.

இவர்கள் யாருமே வேலைக்கு தகுதி அற்றவர்கள் என்ற மனப்போக்கில் கோவை மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பில் காதுகேளாதோருக்கு வைப்பு அளிக்காமல் நிராகரித்து வருகிறது.

இதனால் நாங்கள் மிகவும் பதிக்கப் பட்டுள்ளோம். எனவே, எங்களில் தகுதி உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உதவ வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாநில துணை செயலாளர் அஷோக் ஸ்ரீநிதி, மாவட்ட தலைவர் ராஜகோபால், மாவட்ட துணை தலைவி ஜோப்பியா, சாய்மேக், காதுகேளாதோர் தலைவர் முரளி, சுரேஷ் மற்றும் சதிஸ்குமார், டோமி, பாரதிராஜா, பாலமுருகன், அப்துல்ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

Rukmani
Reporter

About Admin

Check Also

NIPPON PAINT presents ‘LITTLE PRINCE & PRINCESS’ – A unique talent contest show

Chennai, 2018: Citi Centre, Chennai was abuzz with hundreds of enthusiastic kids waiting their turn …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.