Tuesday , October 23 2018
Home / District-News / எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழகத்தில் பாஜகவைத் தவிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் இன்று(ஏப்.30) காலை 10 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும், தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை கண்டித்தும்” மாபெரும் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் ஷேக் முஹம்மது அன்சாரி, பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப. உதயகுமார், ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன், மக்கள் அரசு கட்சி தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், தமிழ் தேச மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி இரா வினோத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தனது கண்டன உரையில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. முதலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருப்பது காவிரி மேலாண்மை வாரியம்தானா? ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு வழக்குத் தொடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம், மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இதுவே காலங்கடத்தும் நடவடிக்கையாகும்.

இந்த நிலையில் இந்தக் காலக்கெடு முடிய இன்னும் ஓரிரு தினங்களே உள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது மேலும் இரண்டு வாரம் அவகாசம் கேட்டு, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இந்த ஆண்டும் ஜூன் மாதம் தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையே ஏற்படும். இதனால் கடந்த ஆண்டை போலவே மீண்டும் தமிழக விவசாயம் நீர்த்துப்போகும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, தமிழக அரசு பாஜகவின் தமிழர் விரோத செயல்களுக்கு ஊதுகுழலாக இருக்காமல், கால அவகாசம் கோரும் மத்திய அரசின் மனுவை நிராகரிக்கத்தக்க வகையில் சட்டரீதியான உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பாஜக அரசு கர்நாடக தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் வாழ்வாதாரத்தில் அரசியல் செய்து வருகிறது. பாஜகவின் தொடர் தமிழக விரோத செயலை தமிழர்கள் ஒரு போதும் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள். மத்திய பாஜக அரசின் இந்த விரோதப் போக்கை கண்டித்து தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கண்டன குரலெழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்தப் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அச.உமர் ஃபாரூக், ரத்தினம், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ஜுனைத் அன்சாரி, வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் அன்சாரி, மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவர் சஃபீக் அஹமது, வழக்கறிஞர் சாகுல் ஹமீது, செயலாளர்கள் முஹம்மது இஸ்மாயில், ராஜா முஹம்மது, பாண்டிதுறை, பொருளாளர் விஜயகுமார், பாப்புலர் ஃபரண்டின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஜாக் உட்படப் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

ஏ.கே. கரீம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஊடகம்& மக்கள் தொடர்பு
9884655542

About Admin

Check Also

கோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.

துர்கா பூஜையை கோவை யூபி பீபுள் வெல்ஃபேர் அசோசியேஷன் கமிட்டி சிறப்பாக நடத்தியது. இது தேவி துர்கா தேவியின் உருவச்சிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.