Tuesday , August 21 2018
Home / District-News / ரூ.216 கோடி செலவில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

ரூ.216 கோடி செலவில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்


கோவை உக்கடம் ஆத்துப்பாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை ரூ. 216 கோடி செலவில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கரும்புக்கடை சந்திப்பில் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, நகரின் முக்கியமான சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் உக்கடம்-ஆத்துப்பாலம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.216 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி, துணை முதல் அமைச்சர். ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த மாதம் அடிக்கல் நாட்டினர்.

இந்த நிலையில் உக்கடம் மேம்பால பணிக்காக பூமி பூஜை உக்கடம் ஆத்துப்பாலம் அருகில் உள்ள கரும்புக்கடையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன்,மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

விழாவில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் சந்திரசேகர், மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பத்திரிகையாளரிடம் கூறிகையில் கோவை மாவட்டத்தில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட வருகிறது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 21/2 ஆண்டு காலத்தில் மேம்பால பணிகள் முடிவடையும்.
இந்த பாலம் குறித்து சிலர் வீணான வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

இங்குள்ள ஆத்துப்பாலம் சுங்கச்சாவடிக்கான அனுமதி இன்னும் 9- மாதத்துக்குள் முடிந்த விடும். எனவே யாரும் வீண் வதந்தியை நம்ப வேண்டாம்.

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் நிறுவனத்துடன் பேசப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான ஒப்பந்தம் போடப்படும்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கோவையில் பல்வேறு திட்டபணிகள் செய்யப்பட உள்ளன. இதற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி வெறும் 33 சதவீத தான்.மீதி 67 சதவீத நிதியை தமிழக அரசும், மாநகராட்சியும் சோந்து ஒதுக்குகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி நமது கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர், அவர் கோவைக்கு கேட்ட திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வருகிறார் இவ்வாறு அவர் கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு

சென்னை தலைமை செயலகம்  முன்பு 16.08.2018  காலை தூத்துக்குடி ஸ்டெர்லைட்  தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரி  பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.