Friday , April 26 2019
Home / Spiritual / சக்தி மாரியம்மன் -பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் வருடாந்திரப் பெருந்திருவிழா

சக்தி மாரியம்மன் -பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் வருடாந்திரப் பெருந்திருவிழா



கோவை சவுரிபாளையம் அருள்மிகு சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் வகையறா கோவில் வருடந்திர பெருந்திருவிழா நடை பெற்றது.

இவ்விழாவில் கயிலை மாமுனிவர் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி, காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமி, வாராகி மந்திராலயம் மணிகண்ட சுவாமிகள் ஆகியோர்களின் நல்லாசியுடன் திருக்கோவிலின் வருடாந்திர பெருந்திருவிழா நடைபெற்றது.

அருள்மிகு சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் முக்கந்தமார்கள், பெரியதனக்காரர்கள், சீர்வரிசைதாரர்கள், திருவிழா குழுவினர், முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் தெய்வீகப் பேரவை இனளஞர் குழுவினர் கலந்து கொண்டனர்.

அருள்மிகு சக்தி மாரியம்மன் சிறப்பு பூஜைகள், சக்திகரகம் எடுத்துவரும் அம்மன் திருவிழா பூவோடு எடுத்து சாமி அக்கினிக்கம்பம் சுற்றி விளையாடுதல், அலகு குத்தி, முடி காணிக்கை செலுத்தியும் அம்மனை வழிபட்டனர்.

அம்மன் பவனி வந்ததை ஆயிரக்கணக்கான பக்தகோடிப்பொதுமக்கள், தாய்மார்கள், ஆன்றோர் கள், குழந்தைகள் யாவரும் சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் திருவருள் பெற்றனர்.

சொசைட்டி ஹாலில் 1000-க்கும் மேற்பட்டடோர் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.