Monday , October 22 2018
Home / Business / 2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு

2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு

இந்தியாவின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி  2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக ப்ளூ பைட்ஸ் நடத்திய ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  டிஆர்ஏ ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை ப்ளுபைட்ஸ் மேற்கொண்டது. இரண்டுமே காம்னிஸண்ட் குழும நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இரண்டாவது அதிக மதிப்புள்ள நிறுவனமாகத் தென் கொரியாவின் ஹுண்டாய், முன்ணனி பிராண்டை விட 93% குறைந்த பிரான்ட்ரெப் மதிப்பெண்ணுடன் தேர்வானது.   6% பிராண்ட் மதிப்பெண் குறைவாக ஜப்பானின் ஹோண்டா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.  நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை முறையே பிஎம்டபிள்யூ, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்ட் மோட்டார்ஸ் கைப்பற்றின. ஆய்வறிக்கையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏழாவது, வோக்ஸ்வேகன் எட்டாவது மற்றும் ஆடி ஒன்பதாவது இடங்களைப் பெற்றன. ஜப்பானின் டொயோட்டா பட்டியலில் பத்தாவது இடத்தை வகித்தது. 2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்ட்கள் அறிக்கையைத் தயாரிக்க 10 நாடுகளைச் சேர்ந்த 42 பிராண்ட்கள்  ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. பட்டியலில் இடம் பெற்ற 42 ஆட்டோமொபைல் பிராண்ட்களில், இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவை தலா 7, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவை தலா 6, அமெரிக்கா மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவை தலா 4. ஊடகங்கள் மற்றும் நுகர்வோர் கருத்துக்களின் பகுப்பாய்வு அடிப்படையில் பிராண்ட் மதிப்புகள் தொடர்ப்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றி இந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்களுக்கான முதன்மை செய்தித் தொடர்பாளர் பூஜா கௌரா பேசுகையில் ‘மதிப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்களிப்பது செய்தித் தொடர்பே ஆகும்.  குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் பயனீட்டாளருடன் நெருக்கம் இன்னும் அதிகம் என்பதால் பிராண்ட் மதிப்பு என்பது இன்னும் முக்கியம். ஆட்டோமொபைல் என்பது ‘அ’ வில் இருந்து ‘ஆ’ விற்குச் எடுத்துச் செல்லும் சாதாரணமான விஷயமல்ல. அது உங்கள் ஆளுமையின் பிரதிபலிப்பு என்பதால் பிரண்ட் மதிப்பு அதை வாங்கும் முடிவில் முக்கியப் பங்களிக்கிறது’ என்றார்.

2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்ட்கள் (ஐஎஸ்பிஎன்: 978-81-932924-6-4) குறித்த ஆய்வு ஆட்டோமொபைல் துறைக்குள் நடைபெற்றதாகும்.  ப்ளூ பைட்ஸ் 42 ஆட்டோப்மொபைல் பிராண்ட்கள் குறித்து 9 நகரங்களில் வெளியாகும் முக்கிய ஆங்கில மற்றும் இந்திய பத்திரிக்கைகளில் 2016 பிப்ரவரி 1 முதல் 2017 ஜனவரி 31 வரை வெளியான 50,000க்கும் அதிகமான கட்டுரைகளை பகுப்பாய்வு செய்து அறிக்கையைத் தயாரித்துள்ளது. கட்டுரைகளின் பகுப்பாய்வுடன் மதிப்பு குறித்து 2500 நுகர்வோர்களின் உள்ளுணர்வுகளையும் டிஆர்ஏ ரிசர்ச் ஆய்வு செய்தது.  50 பக்க ஆய்வறிக்கையின் விலை ரூ 999/-.

இந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள்

இந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள் என்பது ப்ளூ பைட்ஸின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஆகும்.  அச்சு மற்றும் ஆன்லைன் உள்ளிட்ட ஊடகச் செய்திகளை ஆய்வு செய்து பல்வேறு துறைகளில் பிரலமாக விளங்கும் மதிப்பு மிக்க பிராண்ட்களின் மதிப்பு அடைப்படையில் இந்த ஆய்வறிக்கையை ப்ளூபைட்ஸ் தயாரித்துள்ளது. மதிப்பு மிக்க பிராண்ட் ஆய்வு வரிசையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி ஐந்து ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன –  2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள விமான நிறுவன பிராண்ட்கள், 2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள மருந்து தயாரிக்கும் நிறுவன பிராண்ட்கள், 2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ரியல் எஸ்டேட் நிறுவன பிராண்ட்கள், 2017இந்தியாவின் அதிக மதிப்புள்ள கைபேசி நிறுவன பிராண்ட்கள் மற்றும் 2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் நிறுவன பிராண்ட்கள்.

ப்ளூ பைட்ஸ்

காம்னிஸண்டின் ஓர் அங்கமாக 2003 தொடங்கப்பட்ட ப்ளூபைட்ஸ் 9 நகரங்களில் அலுவலகங்களுடன் இந்தியாவின் முன்னணி ஊடகப் பகுப்பாய்வு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அறிமுகமான நாள் தொடங்கி வளரும் ஏராளமான பொலிவுறு தொடர்பாளர்கள்,  தேடுவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், அச்சு மற்றும் ஆன்லைன் ஆதாரங்களுக்கான தவிர்க்க முடியாத ஊடகக் கருவியாகப் ப்ளூபைட்ஸ் நிறுவனத்தைக் கருதுகின்றனர். ஊடகக் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுச் சேவைகளை, 20க்கும் அதிகமான துறைகளைச் சேர்ந்த 250க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், அன்றாடம் 4000க்கும் அதிகமான கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்கிறது. பல்வேறு துறைகளைச் சார்ந்த இந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள் தொடர்பான 12 அறிக்கைகளை இவ்வாண்டு ப்ளூபைட்ஸ் வெளியிட்டத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் இந்தியாவின் அதிக மதிப்புள்ள விமானச் சேவை வழங்கு நிறுவன பிராண்ட்களின் அறிக்கையை வெளியிட்டது.

 

ரேங்க்

 

ஆட்டோமொபைல்

பிராண்ட்கள்

நாடு
1 மாருதி சுசூகி இந்தியா
2 ஹுண்டய் மோட்டார்ஸ் தென் கொரியா
3 ஹோண்டா ஜப்பான்
4 பிஎம்டபிள்யூ ஜெர்மனி
5 டாடா மோட்டார்ஸ் இந்தியா
6 ஃபோர்ட் மோட்டார்ஸ் அமெரிக்கா
7 மெர்சிடிஸ் பென்ஸ் ஜெர்மனி
8 வோக்ஸ்வேகன் ஜெர்மனி
9 ஆடி இந்தியா ஜெர்மனி
10 டொயோட்டா ஜப்பான்
     

About Ragavendhar

Check Also

STYLE BAZAAR Two Day Designer exhibition on 23RD and 24TH of October 2018 70 Handpicked Indian Designers to display Festive Collections

Vanakkam Chennai!!  STYLE BAZAAR is here  to gear all the fashionistas , their wardrobes and …