Wednesday , September 26 2018
Home / District-News / இந்து மக்கள் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில செயலாளர் கே.ஆர். சங்கர் தலைமையில் கோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவில் கூறிகையில் தேசபக்தி விழிப்புணர்வு யாத்திரையின் கோரிக்கைகள்

பகத்சிங் – தேச பக்தி விழிப்புணர்வு யாத்திரைக்கு வரவேற்பும் – சுதந்திர போராட்ட மாவீரர் வ.உ.சிதம்பரனார் _ செக்கிழுத்த நினைவிடத்தில் -வீரவணக்க வழிபாடு
சுதந்திர போராட்ட மாவீரன்
பகத்சிங் அவர்களின் பிறந்த பஞ்சாபில் அவரு டைய திருவுருவ சிலை அமைக்க மற்றும் தியாகிகளுக்கு நல வாரியம், தியாகிகளின் வரலாறு கண்காட்சி பயிற்சி பட்டறை அமைக்க, பகத்சிங்- பாரத தேசத்தின் ” மகன் ” என அறிவிக்கப்பட வேண்டும் என்று மனுவில் கூறினார்.

தேச பக்தி விழிப்புணர்வு ரத யாத்திரையை டெல்லியில் கடந்த மார்ச் 23ம் தேதி 23.03.2018 அன்று இந்தியா கேட் பகுதியில் தொடங்கி 90 நாட்கள் – 15 ஆயிரம் கிலோ மீட்டர் நாடு முழுவதும் யாத்திரை செய்து அந்த அந்த மாநிலங்களில் உள்ள சுதந்திர போராட்ட மாவீரர்களின் நினைவிடங்களில் சென்று வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த யாத்திரை
திரு சுரேந்தர் சிங் விதூரி மற்றும் 15 தேச பக்தர்கள் கொண்ட குழுவினரால் பகத்சிங் திருவுருவ சிலையுடன் கூடிய
ரத யாத்திரை தேசபக்தி விழிப்புணர்வு யாத்திரை குழுவினர் கோவை வருகை தந்த சுதந்திர வீரர் வ.உ.சிதம்பரனார் செக்கிழுத்த இடத்தில் வீர வணக்கம் செலுத்தினர்.

இதில் இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில தலைவர் தமிழ்திரு அர்ஜுன் சம்பத் ஜி-மாநில பொதுசெயலாளர்
இராம. இரவிக்குமார் – மாநில செயலாளர் கே.ஆர். சங்கர் – மாநிலஇளைஞரணி அமைப்பாளர் எஸ்.பி. சண்முகவடிவேல் மற்றும் ராஷ்ட்ரீய ஸனாதன சேவா சங்கம் சீனிவாசன் அய்யா – த ராமநாதன் உள்ளிட்ட மாநில , மாவட்ட , மாநகர நிர்வாகிகள் _ தேசபக்த வீரர்கள் கலந்து கொள்ள கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

About Admin

Check Also

கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா

கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.