Friday , October 19 2018
Home / District-News / மக்களை சந்திக்கும் நம்மவரின் “நாளை நமதே ” சுற்றுப்பயணம்.

மக்களை சந்திக்கும் நம்மவரின் “நாளை நமதே ” சுற்றுப்பயணம்.



கோவை மாவட்டத்தில் மே 11, 12 மற்றும் 13-ம் தேதிகளில் மக்களை சந்திக்கும் நம்மவரின் “நாளை நமதே ” சுற்றுப்பயணம்.

மே 13-ம் தேதி மாலை மாபெரும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர். கமல்ஹாசன்
சிறப்புரையாற்றுகிறார்.
உயர்மட்ட குழு உறுப்பினர் ஆர். தங்கவேல் அறிவிப்பு

கோவையில் மக்கள நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம்

கோவை காந்திபுரத்திலுள்ள கமலா துரைசாமி மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உயர்மட்ட குழு உறுப்பினர் ஆர். தங்கவேலு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் பிரபு பொருப்பாளர் வரவேற்புரை ஆற்றினார்.
தம்புராஜ், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் தாமரைக்கண்ணன், டாக்டர் சரண், டாக்டர் டெய்சி, ப்ரியா முரளி கலந்து கொண்டனர்.

இதில் சிவக்குமார், பிரவீன், கார்த்திக், சிராஜ், இப்ராஹிம், அப்பாஸ், சித்திக், கல்யாண சுந்தரம், முரளி,மோகன்ராஜ், கார்த்திகேயன், கணேஷ்குமார், உதயக்குமார், பாபு, கேபிள் செந்தில், ராஜேஷ், முஸ்தபா, தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உயர்மட்ட குழு உறுப்பினர் ஆர். தங்கவேல் ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற மே மாதம் 13-ம் தேதி கோவையில் மக்கள நீதி மய்யம் நிறுவனத்தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் 11,12 தேதியன்று
மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று ஆலோசனை கூட்டத்தில் தங்கவேலு அறிவித்தார்.

இக்கூட்டத்திற்கு பல மாவட்டங்களில் இருந்து 500-க்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

கீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற,  வாக்காளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.