Wednesday , September 26 2018
Home / District-News / கோவையில் டி.டி.வி.தினகரன் போட்டி

கோவையில் டி.டி.வி.தினகரன் போட்டி

மத்திய அரசு செயலால் தான் தமிழகத்தில் கருப்புக்கொடி போன்ற போராட்டங்களுக்கு  தள்ளப்படுவதாகவும், பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதில் தவறு ஏதுமில்லை என சுயேட்சை எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டி சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஐ.பி.எல். நடத்த வேண்டாம் என்பது எங்களுடைய நிலைபாடு என்றும், பிரதமர் வருகைக்கான கருப்புக்கொடி போராட்டத்தில் நாங்கள் ஈடுபடா விட்டாலும், மற்ற போராட்டங்கள் எங்கள் சார்பில் தொடரும் என கூறினார்.

தற்போது ஐ.பி.எல். போட்டி நிறுத்துவதாக சொல்லப்படுவது முன்னதாகவே செய்திருந்தால் நேற்றைய தேவையற்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனவும், ஜெயலலிதா இருந்த போது இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டவர், நேற்றைய கலவரத்துக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.

ஐ.பி.எல்.லிற்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் சொல்வது தவறு எனக்கூறியவர், ஒன்றாக நின்று போராடினால் தான் வெற்றி என்பதில்லை எனவும், தமிழக அரசியல் கட்சிகள் தனி தனியாக பலமான அழுத்தம் கொடுக்கும் வகையில் தான் போராடி வருவதாக கூறியவர், இருப்பினும்
எங்களையும் கட்சி என எண்ணி சேர்த்து கொண்டால் அனைத்துக்கட்சி உடன் இணைந்து போராடலாம் என்றார்.

காவல்துறையினர் ரொம்ப கடுமையாக நடந்தது தான் நேற்றைய தின வன்முறைக்கு காரணம் எனவும், அதிமுகவின் உண்ணாவிரதம் போராட்டம் கபட நாடகம் என விமர்சித்தவர்,  கடந்த 6 மாதமாக நீதிமன்ற தடையால் தான் இந்த ஆட்சி தப்பித்து வருவதாகவும், தமிழகத்தில் தேர்தல் நடந்தால் ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் தான் அமைப்போம் என்றும், நீதிமன்ற தீர்ப்பு வந்தால் எந்த நேரத்திலும் இந்த அரசு களையும் என்றார். நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், அமீர் உள்ளிட்டோர் மீது  வழக்குப்பதிவு செய்தது கண்டிக்கத்திற்குரியது என்றும், 15வது நிதிக்குழு தொடர்பாக கேரளாவில் நடந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் எவ்வாறு செல்வார் என கேள்வி எழுப்பியவர், எடப்பாடி அரசு எடுபுடி அரசு என்றும் சாடினார்.

இதில் கோவை மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேலஞ்சர் துரை, மாநகர் வடக்கு மாவட்ட ஜி.அலாவுதீன், மாநகர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் எம். கோகுலம், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சி.சிவசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா

கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.