Thursday , December 13 2018
Home / District-News / இந்து முன்னணி கட்சியினர் ஆட்சியரிடம் மனு.

இந்து முன்னணி கட்சியினர் ஆட்சியரிடம் மனு.

கோவை இந்து முன்னணி கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தலைவர் தசரதன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

உடன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா, மாவட்ட பொதுசெயலாளர் சதீஸ், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், ஆறுச்சாமி மற்றும் செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மனுவில் கூறிருப்பது கோவை வெள்ளலூர் பகுதியில் இந்து மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

அங்கு உள்ள ஆண்டாள் அவன்யூ என்ற இடத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்ட முடிவு செய்துள்ளனர். இந்த பகுதியில் இந்து மக்கள் அதிகம் இருப்பதால் மசூதி கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது.

அப்படி அனுமதித்தால் வெள்ளலூர் பகுதியில் மதப்பிரச்சனைகள் ஏற்படும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் இரத்த தான முகாம்

சென்னை ஐசிஎப் காந்தி நகர் நன்னல மையம்  பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதியில் மாபெரும் இரத்ததான  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.