Wednesday , June 20 2018
Home / District-News / அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்.

அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்.

கோவையில் இருந்து பெங்களூருக்கு அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்

கோவை கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும் ” பிளை பஸ்” என்ற பெயரில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது.

தொடக்க விழா கோவை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் புதிய பஸ்சை கோவை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் அரசு சிறப்பு வக்கீல் எஸ்.பி.சந்திரசேகர், கர்நாடகா அரசு பஸ் கோவை கிளை மேலாளர் ரவி, ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஜமீல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கர்நாடக அரசு போக்குவரத்து கழக மேலாளர் ரவி கூறிகையில்
கோவை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி மல்டி ஆக்சில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது. குளு குளு வசதியுடன் கூடிய இந்த பஸ் கழிவறை வசதி உள்ளது. மொத்தம் 72 இருக்கைகள் உள்ளன. ஒவ்வொரு இருக்கையின் பின் புறமும் டெலிவிஷன் வசதி, ஒய் பை வசதி, உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை -பெங்களூரு இடையிலான கட்டணம் ரூ.890. பெங்களூரு விமான நிலையத்துக்கு ரூ.1.100 வசூலிக்கப்படும் அவர் கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

6 lakh trucks will not run in TN, Truck strike from June 18

Rising diesel price, third party premium and toll charges are a few important issues on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *