Sunday , October 21 2018
Home / District-News / சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வங்கி அதிகாரிகளின் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் சமூக விழிப்புணர்வு இயக்கம் நிறுவனர் தலைவர் ஜே.டி.சாக்ரட்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலத் தலைவர் சுசி கலையரசன். பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆ. தங்கவேல் பாண்டியன், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தலைவர் ரவிக்குமார், அன்னை தெரசா அறக்கட்டளை தலைவர் பெஞ்சமின் முருகேசன் மற்றும் சமூக விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் சு.பா. முத்துகிருஷ்ணன், ராஜாராம், உதயகுமார் மாதம்பட்டி பாண்டியன், அருள்பிரபு, ஸ்டாலின், காலனி கோவிந்தன், இருகூர் பூபதி, பெலிக்ஸ், ராஜசேகர், வழக்கறிஞர்கள் விஜய் ஆனந்த், பிரகாஷ், சுதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வங்கி அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனத்தாருக்கும், கையூட்டு கொடுப்போருக்கும் மட்டுமே போலி ஆவணங்களை அடமானங்களாக வைத்துக் கொண்டு கடன் கொடுக்கிறார்கள்.

சிறு தொழில் முனைவோரை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக ‘ முத்ரா ‘ என்ற கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. வங்கி மேலாளர்கள் இந்த கடன்களை பினாமி பெயர்களில் எடுத்து கந்துவட்டிக்கு கொடுத்து கொள்ளையாக சம்பாதிக்கிறார்கள். ஐம்பது சதம் வரை கையூட்டு வாங்குகிறார்கள்.

பினாமி மற்றும் போலி பெயர்களின் முந்த்ரா கடனை எடுத்து வட்டிக்கு கொடுத்து அனுபவிக்கும் பஞ்சாப் சிந்து வங்கி மேலாளர் மற்றும் பிற வங்கிகளின் மோசடி செயல்கனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.