Sunday , August 19 2018
Home / District-News / சென்னையில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது ஜார்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை கண்டித்தும், தடையை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று (16.03.2018) மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய இந்திய அரசமைப்பின் விழுமியங்களைப் போற்றி இந்தியாவின்  பெரும்பாலான மாநிலங்களில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் தனித்தும், பிற ஜனநாயக அரசியல் இயக்கங்கள், கட்சிகளோடு இணைந்தும் அறப் போராட்டங்களிலும் ஆக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் மீது போலியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து எந்த ஒரு முகாந்திரமும் இன்றி, ஆங்கிலேய காலத்து கிரிமினல் திருத்த சட்டம் 1908 என்ற சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு தடை செய்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. அரசாங்கம் அமைந்ததில் இருந்து ஜனநாயக சக்திகளுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு இந்த தடையை விதித்துள்ளது.
இந்த தடையை கண்டித்தும், தடையை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த மார்ச் 02 அன்று சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் நடைபெற்ற மதசார்பற்ற, இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கலந்தாலோசனை கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், அனைத்து கட்சிகளின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இன்று (மார்ச்.16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ, தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் முனவ்வர் பாஷா, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிந்திரநாத், திராவிட கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சி-தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் கே.ஜலாலுதீன், மனித நேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரஷீத், வெல்ஃபேர் பார்ட்டி மாநில துணைத் தலைவர் முஹம்மது ஹாலித், கிருஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ், தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பசீர் அகமது, தமிழ் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பாலன், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.செரீப், பி.யு.சி.எல். தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி, பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், இந்திய தேசிய லீக் கட்சி செயல் தலைவர் எஸ்.கே.அத்தாவுல்லா, ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மௌலவி. வி.மன்சூர் காஷிபி, என்.சி.ஹெ.ஆர்.ஓ. தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ், முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா முஸாஃபர், ஏ.கே.முஹம்மது ஹனீஃபா, இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.செந்தில்,  தமிழர் விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் சௌ.சுந்தர மூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஆவல் கணேசன்,தோழர்.வளர்மதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நியாயமற்றது. ஆகவே, ஜார்க்கண்ட் மாநில அரசும், மத்திய அரசும் சிறுபான்மை விரோதபோக்கை கைவிட்டு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும், பொய் புகார்களின் அடைப்படையில் சிறையிலடைக்கப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்…

About Admin

Check Also

Kavithalayaa Productions Forays into Digital Media Launches “Harmony-with AR Rahman”

Kavithalayaa Productions, founded by the legendary filmmaker and Dadasaheb Phalke awardee K. Balachander, announced recently …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.