Wednesday , June 20 2018
Home / EDUCATION / ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 27-ஆம் ஆண்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 27-ஆம் ஆண்டு விழா


கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 27-ஆம் ஆண்டு நாள் விழா எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது.

இவ்வழாவில் சிறப்புவிருந்தினராக சென்னை டைட்டன் நிறுவனத்தின் மேலாளர் எஸ்.பி.வள்ளி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

உரையில் பெண்கள் அனைத்து துறையிலும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளனர்.

நிறுவனங்களில் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பு உள்ளது. பெண்கள் பணிபுரியும் இடத்திலும், வீட்டையும் சமநிலையை வகித்து குடும்பத்தில் வேலைகளை பகிர்ந்து செயல் படவேண்டும்.

திருமணத்திற்குப் பின்னும் வேலை தொடர்ந்து செய்ய வேண்டும். என்பதை மாணவர்களுக்கு உரையின் வழி வெளிப்படுத்தினார்.

இவ்விழாவில் எஸ்.என்.ஆர். அற நிலையத்தின் இயக்குனர் டாக்டர் ஏ.ஏபினேசர் ஜெயக்குமார் அவர்கள் தம் உரையில் கோவையில் முதன் முதலில் பெண்களுக்கு என்று துவங்கப்பட்ட முதல் சுய நிதிக்கல்லூரியில் பயிலும் வாய்ப்புகளை பெற்றுள்ளது.

நீங்கள் ஓவ்வொருவரும் தனித்திறமைமிக்கவர்கள் சரோஜினி நாயுடு, இந்திராகாந்தி, கல்பனா சாவ்லா, முத்துலடசுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை போன்ற வர்கள் போல நீங்களும் சாதிக்கப் பிறந்தவர்கள் தைரியத்துடனும் தனித்திறனுடனும், பாதுகாப்புடனும் உள்ளீர்கள். பெண்கள் சாதிக்க முடியும் எனபதை இந்நிகழ்வின் முலம் வெளிப்படுத்தினர்.

இவ்விழாவில் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் டாக்டர்.கி.சித்ரா அவர்கள் வசித்தார்.

கணினித்துறை தலைவர்டாக்டர் வி.கிருஷ்ணப்பரியா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவியர்கள் மற்றும் பல்கலைக்கழக அளவில் தங்கபதக்கம் பெற்ற மாணவிகள் மற்றும் ஆய்வுத்துறையில் சிறந்து விளங்கிய பேராசிரியர் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தனர்.

மாணவர் மன்றத்தலைவி செல்வி அஹானகே.பிஜு நன்றியுரை வழங்கினார்.

கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

TEAM WORK WILLGET THE BEST RESULTS, SUB COLLECTOR TELLS PARTICIPANTS AT SRMIST

Calling upon participants at a refresher course to prioritise their work and go beyond the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *