Sunday , December 16 2018
Home / Hospitals / உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை நிறுவும் துவக்க விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை நிறுவும் துவக்க விழா

சந்திரன் ‘ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் டஸ்யா இணைந்து அரசு மருத்துவமனைகளில் இலவச நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவி அர்ப்பணிப்பு

கோவை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சந்திரன்’ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் டஸ்யா பெண்கள் மேம்பாட்டு அமைப்பும் இணைந்து சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை நிறுவும் துவக்க விழா கோவை அரசு மருத்துவமனையில் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கே.பெரியய்யா துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கோவை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் பி.அசோக்குமார் சானிட்டரி நாப்கினை அழிக்கும் இயந்திரத்தை துவக்கி வைத்தார்.

கோவை உதவிக் கலெக்டர் சரண்யா ஆரி முதலாவது நாப்கினை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இவ்விழாவிற்கு கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் அதிகாரி (ஆர் எம் ஓ) டாக்டர் ஆர்.சவுந்திரவேல், மாவட்ட சமூக நல அதிகாரி டாக்டர் ஷெரின் பிலிப் கவுரவ விருந்தினராக பங்கேற்றனர்.

இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் சந்திரன்’ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் டஸ்யா பெண்கள் மேம்பாட்டு அமைப்பும் கூறிகையில், இந்த திட்டத்திற்காக விரிவான ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு இது துவக்கப்பட்டுள்ளது. பொது இடங்களிலும் இந்த இயந்திர வசதியை நிறுவுவது பற்றியும் ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியால் பெண்கள் விழிப்புணர்வு பெறுவதோடு, அவரச தேவைக்கு இதில் நாப்கின்களை இலவசமாக பெறவும் முடியும். இந்த சர்வே, பொது இடங்களில் 1000 பெண்கள் மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் காந்திபுரம், டவுன்ஹால், புறநகர் பேருந்து நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 60% பெண்கள் இந்த நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொது இடத்தில் தேவை என தெரிவித்துள்ளனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

RECENT ADVANCES AND INNOVATIONS IN THE FOOT AND ANKLE SURGERY

The focus of this  congress held on Dec [email protected] vivanta Connemara, Chennai is on the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.