Monday , January 21 2019
Home / District-News / கோவையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்.

கோவையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்.


ஜெயலலிதா பிறந்த நாள் விழா
கோவையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வழங்கினார்.

கோவை இதயதெய்வ மாளிகை வாளகத்தில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர். ஜி.அருண்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் துறை அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றி நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள்
அம்மன்.கே.அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், முன்னாள் அமைச்சர் செ..வேலுச்சாமி, கே.பி.ராஜீ மற்றும் சி.டி.சி.சின்னராஜ், சாரமேடு பெருமாள் மற்றும் மாவட்டக் கழகம், பகுதி,வட்டம்,கிளை, ஒன்றியம் நிர்வாகிகள், சார்பு அணி அனைத்து நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் செயல்வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏராளமானவர்களுக்கு தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டி, ஹாட் பாக்ஸ், புடவை, வேஷ்டி உள்ளிட்ட ஏராளமான பொருள்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”

கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா, திருவள்ளுர் தினம், தைபூசம்” என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.