நடிகை சிநேகா மற்றும் தேசிய விருது வென்ற எடிட்டர் ராஜா முகம்மது துவக்கி வைத்தனர்.
அழகு நிலையத்துறையில் (ஹேர் அண்ட் ஸ்டைல் சலூன்) இந்தியாவின் பெரிய சங்கிலிதொடர் நிறுவனமான கிரீன் டிரெண்ட்ஸ் நாடு முழுவதும் 400 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 401 கிளையை தற்போது திருச்சி பொன்நகரில் அமைத்துள்ளது. திருச்சி மாநகரின் 8வது கிளையான இந்த புதிய அழகு நிலையத்தை நடிகை சிநேகா மற்றும் தேசிய விருது வென்ற எடிட்டர் ராஜா முகம்மது துவக்கி வைத்தனர்.
பிரமாண்டமாக நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு புதிய கிரீன் டிரெண்ட்ஸ் அழகு நிலையத்தை துவக்கி வைத்த பின் நடிகை சிநேகா கூறியதாவது:
கிரீன் டிரெண்ட்ஸ் பயணத்தில் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையான 401 அவுட்லெட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சலூனால் வழங்கப்படும் அவர்களுடைய வியக்கத்தக்க வகை சேவைகள் குறிப்பிடத்தக்கது மற்றும் அவர்களுடைய சேவைத்தரம் போற்றுதலுக்குரியது. வருங்காலத்தில் அவர்களுடைய அழகுச்சேவைகளை பயன்படுத்தி அனுபவித்து பார்ப்பதற்கு நான் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன் என்றார்.
அதே போன்று நிகழ்ச்சியில் பேசிய தேசிய விருது பெற்ற பருத்தி வீரன் புகழ் எடிட்டர் ராஜா முகம்மத கூறுகையில் கிரீன் டிரெண்ட்ஸ் சலூனால் வழங்கப்படும், சீர்படுத்தி அழகுபடுத்தும் சேவைகளின் தரத்தினால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன் என்பதை இந்த சிறப்பு தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
கிரீன் டிரெண்ட்ஸ் யூனிசெக்ஸ் ஹேர் அண்ட் ஸ்டைல் சலூன் தலைமை இயக்க அலுவலர் தீபக் பிரவீன், மற்றும் கவின் கேர் பிரைவேட் லிமிடெட் டிரெண்ட்ஸ் டிவிஷன் பிசினஸ் ஹெட் ஆர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் தரமான புராடக்ட்களைப் பயன்படுத்தி தரமான இயக்க நடைமுறைகளைக் கொண்டு எங்கள் சலூன்களை நடத்தி வருகிறோம். எங்கள் ஸ்டைலிஸ்டகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவத்தைத் கொடுப்பதில் உயரிய பயிற்சியளிக்கப்படுகிறது. அதிநவீன தலைமுடி ஸ்டைலிங் (சிகை அலங்காரம்) மற்றும் சரும சேவைகளை எமது சலூன்கள் வழங்குகின்றன. இங்கு பொன்னகரில் கிரீன் டிரெணட்ஸ்&ன் தரமான சேவைகளைப் பெற்று வாடிக்கையாளர்கள் மகிழ்வார்கள் என்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை பொன்னநகர் கிரீன் டிரெண்ட்ஸ் கிளையின் நிர்வாகி செந்தில் அனைவரையும் வரவேற்றார்.

Photographer (Kovai)