Monday , December 17 2018
Home / District-News / கோவையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

கோவையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

 

கோவை சவரிபாளையத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் ஏன் சட்ட சபை வளாகத்திற்கு செல்லக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

மாணிக்கம் கன்ஸ்ட்ரக்சன் என்ற
புகாருக்குள்ளான நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்று இருக்கின்றது எனவும்,
இந்த ஊழல் விசயத்தை தங்க தமிழ்செல்வன்,வெற்றிவேல் ஆகியோர் வெளியில் பேசுவதை தடுக்கவும், திசை திருப்பவுமே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

டிடிவி தினகரன் 10 ஆயிரம் கோடி வைத்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகின்றார் என தெரிவித்த அவர், அப்படிப்பட்ட தினகரன் பின்னாடி ஏன் ஜெயக்குமார் சுற்றினார் எனவும், அவர் மீது ஏன் ஜெயக்குமார் புகார் அளிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

மாணிக்கம் கன்ஸ்ட்ரக்சன் ஏற்கனவே பணமதிப்புழப்பு நடவடிக்கையில் சிக்கிய நிறுவனம் எனவும் மாணிக்கம் கனரஸ்டிரக்சன் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்ததா இல்லையா என்பதுதான் கேள்வி எனவும் அவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை அமைச்சர் மணிகண்டன் கமிஷன் விவகாரத்தில் சிக்கிய நிலையில் அதை மறைக்க , வேட்டி பற்றி பேசி மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பி இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.

18 எம்.எல்.ஏ களின் வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம். எனவும் விரைவில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சி முடிந்தவுடன் தற்போது இருப்பவர்கள்
சிறையில் இருக்க வேண்டியது இருக்கும் என தெரிவித்த அவர்,
அமைச்சர் தங்கமணி கன்னாபின்னாவென பேசும் போதே எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஒழித்து விட்டு முதல்வராக அமைச்சர் தங்கமணி முயற்சிக்கின்றார் என தெரிவித்த அவர், சில அமைச்சர்கள் தற்போது இந்தி படித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

6 அமைச்சர்களை தவிர அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ களும் டிடிவி தினகரன் பின்னால் விரைவில் வருவார்கள் எனவும் தெரிவித்த அவர், கர்நாடக மாநில டி.ஐ.ஜி ரூபா வெளியிட்ட தகவல்கள் தவறானது எனவும் சசிகலாவிற்காக சிறையில் எந்த ஒரு விதிமீறலும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் தலைமறைவாக வில்லை எனவும், எப்போது கூப்பிட்டாலும் வருவார்கள் எனவும் தெரிவித்த அவர், நாளை ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏகப்பட்ட பணத்தை கொள்ளையடித்து வைத்து இருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார் என தெரிவித்த அவர், டிடிவி தினகரனை பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு தனி சன்மானம் கொடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம் எந்த விதத்திலும் பயன்தராது என்பதுதான் ஜெயலலிதாவின் நிலைப்பாடு எனவும்
பிரதமர் மோடி காவிரி விவகாரத்தில் எந்த விதத்திலும் உதவ மாட்டார் எனவும், இங்கிருந்து கொடுக்கும் மனுவைக்கூட அவர் பெற மாட்டார் எனவும் புகழேந்தி தெரிவித்தார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி உடன் வார்டு செயலாளர்கள் நாகராஜ், ஹரிஹரன், சதீஷ் கண்ணன் கே.எம்.புகழேந்தி, வக்கீல் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என்.ருக்மணி
[email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

REKHA MITTAL’s PAINTINGS SHOWCASED AT DAKSHINA CHITRA

Chennai, 2018: Dakshina Chitra hosted an exhibition of paintings by Rekha Mittal on its premises from …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.