Wednesday , September 26 2018
Home / District-News / கோவை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்லூரியில் கலைத் திருவிழா

கோவை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்லூரியில் கலைத் திருவிழா

கோவை சிங்காநல்லூரில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா ககலைத் திருவிழா அறிவியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையேயான கலைத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஆர்.பிரேமலதா வரவேற்புரையாற்றினார்.

இக்கல்லூரியின் செயலர் ஸ்ரீ மதி தனலட்சுமி ஜெயச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தலைமையுரையாற்றினர்.

இவ்விழாவிற்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த கலைத் திருவிழாவில், பல்வேறு நடனம், குழுநடனம், பேஷன் அணிவகுப்பு, மருதாணி அலங்காரம், சமையல் கலை, விளம்பரகலை மற்றும் பலர் போட்டிகள் நடைபெற்றன.

கலைத் திருவிழாவில் 30- கல்லூரிகள் பங்கேற்றனர். இதில் வெற்றியாளர்களுக்கு பணமுடிப்புடன் பரிசு, கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதையடுத்து கல்லூரியின் செயலர் ஜெயச்சந்திரன் தனலட்சுமி கூறிகையில் மாணவ சமுதாயம் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த இது சிறந்த களம் என்றார். இக் கலைத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சிகளுக்கிடையே துவக்கம் முதல் இறுதி வரையிலும் இரு நட்சத்திரங்களும் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி ஊக்குவித்தனர் என்று கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி [email protected]

About Admin

Check Also

கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா

கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.