Tuesday , November 20 2018

கோவையில் புதிய தார்ச்சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி சாலையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்…

கோவை மாநகராட்சி பகுதிகளில் கீழ்க்காணும் சாலைகள் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக பொதுமக்கள் வாகனங்களில் மற்றும் நடந்து செல்லமுடியாத அளவிற்கு, குண்டும் குழியுமாக , மிகமிக மோசமான சாலையாக இருக்கிறது. இது தொடர்பாக இந்த சாலைகளை செப்பனிட்டு புதிய தார்ச் சாலைகளாக அமைக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களிடமும் பலமுறை நேரிலும் , கடிதம் மூலமாகவும் எடுத்துச் சொல்லியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை.

ஆகவே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் , உடனடியாக தார்ச்சாலை அமைக்கக் கோரியும் திமுக சார்பில் பீளமேடு அவினாசி சாலையில் சாலை மறியல் போராட்டம் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்தனர்.

1 ) 56 வது வட்டம் பீளமேடுபுதூர் மாரியம்மன் கோவில் வீதி முதன்மைச்சாலை

2) பீளமேடுபுதூர் பத்திரகாளியம்மன் கோவிலருகில் சாலையின் மத்தியில் சாக்கடை கல்வெட்டு உடைந்து பெரிய குழி ஏற்பட்டுள்ளது. பத்திரகாளியம்மன் கோவில் கிழக்குப்புறம் சாலையும் ஓராண்டு காலமாக பழுதடைந்து மிக மோசமாக உள்ளது.

3 ) 66 வது வட்டம் அவினாசி சாலை நவ இந்தியாவிலிருந்து உடையாம்பாளையம் செல்லக்கூடிய சாலை பாதாள சாக்கடை பணியை மேற்கொண்டதால் யாருமே செல்ல முடியாத நிலையில் உள்ளது .

4) அவினாசி சாலை பீளமேடு ராதாகிருஷ்ணா மில் சந்திப்பிலிருந்து சௌரிபாளையம் செல்லக் கூடிய முதன்மைச் சாலை படுகேவலமாக உள்ளது .

5) திருச்சி சாலை முதல் கள்ளிமடை செல்லக் கூடிய சாலைகள், கள்ளிமடை, ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் படுகேவலமாக உள்ளது

6 ) ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்திலிருந்து இருகூர் செல்லக் கூடிய சாலை யாருமே செல்ல முடியாத நிலையில் உள்ளது.

எம்.எல்.ஏ . நா.கார்த்திக் கூறிகையில்
இது போன்ற பல்வேறு கோரிக்கைளை மாநகராட்சியில் பலமுறை தெரிவித்தும் பயனில்லை இனியும் மாநகராட்சி நிர்வாகம் மவுனம் சாதித்தால் வீதி வீதியாக களம் இறங்கிய போராட்டம் நடத்தப்படும் என்றார்

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

NIVEDITA WOMEN DEVELOPMENT & WELFARE ORGANIZATION & LIONS CLUB OF SOUTH MADRAS

DRAWING & PAINTING COMPETITION NIVEDITA WOMEN DEVELOPMENT AND WELFARE ORGANIZATION .& LIONS CLUB OF SOUTH …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.