Monday , December 17 2018

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தென்னை விவசாயிகள் தயாரித்த நீரா பானத்தினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிமுகப்படுத்தினார்.

விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல், துணை ஆணையர் ( காலல்) பாலசுப்பிரமணியன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி, (வேளாண்மை ) உதவியாளர் மோகன்ராஜ் சாம்வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தென்னை விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில், நீரா பானம் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் 3 நிறுவனங்கள் தென்னை நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதி கோரி, விண்ணப்பங்களை வழங்கினர்.

இந்நிறுவனங்கள் தயாரித்த நீரா பானத்தை சுவைத்து பார்த்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் நீரா உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் வழங்கப்படுமென தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் T.N.ஹரிஹரன்இ.ஆ.ப பேட்டியில் கூறிகையில்
நீரா பான உற்பத்தி தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை அளிக்கும் எனவும், இந்தாண்டில் தினசரி ஆயிரம் லிட்டர் நீரா தயாரிக்கவும், அடுத்து வரும் ஆண்டுகளில் உற்பத்தி அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் ஆனைமலை தென்னை விவசாயிகள் நிறுவனத்தின் தலைவர் தனபால் தெரிவித்தார்.

நீரா பானத்தின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் நூறு ரூபாய் என நிர்ணயிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

About Admin

Check Also

POPULAR SINGER SONU NIGAM TO JUDGE THE 6th EDITION OF BIG FM’s AWARD-WINNING ON-AIR SINGING TALENT SHOW ‘BENADRYL BIG GOLDEN VOICE’

Chennai,2018: BIG FM, one ofthe India’s largest radio networks, has announced the sixth season of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.