Saturday , February 24 2018
Home / District-News / பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,
எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

தமிழகம் 5 இலட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது எனவும்,
எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர் எனவும் கூறிய அவர், இந்த ஒராண்டு ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை முதல்வராக்குவோம் என கூறிய வைகோ, தற்போது ஸ்டாலினை முதல்வராக்குவதே தனது நோக்கம் எனக்கூறியது தொடர்பான கேள்விக்கு, இதுகுறித்து நீங்கள் வைகோவிடம் தான் கேட்க வேண்டுமென பதிலளித்தார்.

தமிழகம் தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என்ற பாஜக மாநில தலைவர் தமிழிசை கருத்து குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவர் கருத்திற்கும் பதில் சொல்ல முடியாது எனக்கூறிய அவர், மதத்தால் யார் மனதையும் புண்படுத்தகூடாது என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என்றார்.

ஆட்சியாளர்கள் ஊழல் செய்து சுமையை மக்கள் மீது திணிக்கின்றனர் எனவும், இதனால் நாடும், மக்களும் கடனில் உள்ளனர் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்தை சென்னைக்கு வழி அனுப்பி வைத்த கோவை தே.மு.தி.க மாநகர் செயலாளர்கள் காட்டன் செந்தில், எஸ்.எம்.முருகன், பகுதி பொறுப்பாளர் வாழை இலை முருகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

Cricket Canada becomes first Associate member to set in motion the creation of T20 franchise league in the lucrative North America market

Chennai , February 2018: Cricket’s original home was always Canada because the sport was first …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *