Saturday , August 18 2018
Home / District-News / நேப்கீன் மேன் சாதனை. ….

நேப்கீன் மேன் சாதனை. ….

 

அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு ஹிந்தி முழு நீளப்படமாக நேப்கீன் மேன் என்ற தலைப்பில் நேற்று இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 10 கோடி வசூலித்து சாதனை

கோவை தனியார் வணிக வளாகத்தில் நேப்கீன் மேன் என்ற தலைப்பில் அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உலகிற்கு எடுத்துச்சொல்லும் விதமாக நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் வி ஐ பிக்களுக்கான பிரத்யேக காட்சி முடிந்த பின்பு
பத்திரிக்கையாளர்களிடம் அருணாச்சலம் முருகானந்தம் பேசுகையில் உலகத்தில் முதல் படம் பெண்கள் சுகாதாரத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

கோவை காரர் ஒருவரின் படம் வெளியிடப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்தப்படம் உலகம் ரஷ்யா, ஈராக், அரபு நாடுகள் உடபட 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டது.

குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டும். மாதவிடாய் குறித்து முழு விழிப்புணர்வு படம். இந்தியாவில் 12% பெண்கள் மட்டும் நேப்கீன் பயன்படுத்தப்படுவதாகவும், மீதமுள்ள 88% பெண்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த படத்திற்கு நேற்று மட்டும் ரூபாய் 10 கோடி வசூலித்துள்ளது.

இந்த படத்தில் என்னுடைய பாத்திரத்தில் அக்சய்குமார் நடித்தது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் எங்கே போனாலும் அனைத்து பெண்களும் பாரட்டுவதாக தெரிவித்தார்.

About Admin

Check Also

72 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு

72 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருங்குடி மயானத்தில் தமிழ் தேசம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.