கோவை மாநகர காவல் துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும்
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை லட்சுமி மில்ஸ் பகுதி சிக்னல் நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு
கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் I.P.S., அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
சாலை விதிமுறைகளை தலைக்கவசம் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் முறையாகப் பின்பற்றி வந்த பொதுமக்களுக்கு புத்தகங்கள் சிறப்புப் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆணையாளர் கொடிசெல்வம், போக்குவரத்து ஆய்வாளர் ஏ.சண்முகம், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், எஸ் என். ஆர். கல்லூரி பேராசிரியர் பிரகதீஸ்வரன், கல்லூரி துணை முதல்வர் தீனா, பேராசிரியர்கள் விஸ்வநாதன், சுபாஷினி, போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் ஏற்படுத்தினர்.
கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி
[email protected]

Photographer (Kovai)