Friday , February 22 2019
Home / District-News / கோவையில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவையில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவையில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது ரஜினிகாந்த் தன் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக முதன் முதலாக கோவையில் வழக்கறிஞர்கள் பிரிவு, மகளிர் வழக்களிஞர்கள் பிரிவு கோவை நீதிமன்ற வளாகத்தில் துவக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கோவை ஆர்.எச்.ஆர். ஓட்டல் அரங்கில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் ஷரீப் கலந்து கொண்டார்.

இவ்விழா வி.சி.வாசுதேவன் தலைமை தாங்கினார். இதில் விமலராகவன், என்.விஜய ராமன், ஜெயஸ்ரீ, கெளரி சங்கர், செந்தில், முருகேஷ் மனோகரன், ஜி.ருத்ரகுமார் முன்னிலை வகித்தனர்.

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனார்.

இதையடுத்து
செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் தலைவர் வி.சி.வாசுதேவன், மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் சிறப்பு தன்மையுடன் செயல்படப் போவதாகவும் கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினிக்கு அரசியல் பிரச்சனை வந்தபோதே தாங்கள் தான் தமிழகத்தில் முதன்முதலாக வழக்கறிஞர்கள் பிரிவு துவங்கியதாகவும், தற்போது ரஜினி முழு நேர அரசியல் களத்தில் இறங்குவதால் அவருக்கு ஆதரவாக செயல்படப் போவதாக தெரிவித்தார்.

இந்த சேர்க்கை முகாமில் 100 க்கும் மேற்ப்பட்டோர் உறுப்பினராக இணைந்து உள்ளனர் என்று கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி
[email protected]
9486060649

About Admin

Check Also

பம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பம்மல் நகர அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி, பம்மல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.