கோவையில்
திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவை பீளமேட்டில் சாலையை ஆய்வு செய்த திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ பேட்டி
கோவை பீளமேடு புதூரில் உள்ள மோசமான சாலைகளை திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
பீளமேடு புதூரில் இருந்து திருமகள் செல்லும் சாலையை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொது கழிப்பிடத்தின் கழிவுகள் வெளியே வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேட்டியின்போது கூறுகையில்;- திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் முடிக்கப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் பீளமேடுப்புதூரில் இருந்து திருமகள் நகர் தொடங்கும் பகுதி வரையுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு பணிகள் நடந்துள்ளது. அதன்பின் சாலைகள் அமைக்கப்படாததால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பெரியாரின் வாகனங்கள் சாலையிலேயே நின்று விடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். கோவை மாநகராட்சி மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து ஆவாரம்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பில் சத்துணவு கூட கட்டிடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அங்கன்வாடி மையம் மற்றும் நூலகத்தை பார்வையிட்டு அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசாரித்தார்.
ஆய்வின்போது, வட்ட கழக செயலாளர்கள் ஆர்.மகேஷ்குமார், பகுதி கழக துணைசெயலாளர் வெ . கோவிந்தராஜ், பி.டி.முருகேசன் மற்றும் சிவாகுமரன், மாடசாமி, முருகேஷ், சுரேஷ் , வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.