Sunday , October 21 2018

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் தகவல்களை அறிய புதிய இணையதள காணொலி அறிமுக விழா

கோவையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் பற்றிய தகவல்களை அறிய புதிய இணையதள காணொலி (யூடியுப்) சேனல் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.
புற்றுநோய் தகவல்களை அறிய புதிய இணையதள காணொலியை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். இதில், புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர். பி.குகன், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்

இது குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பி. குகன் கூறியதாவது,
புதிய இணையதள காணொலியில் படக்காட்சிகளை வெளியிட்டுள்ளது.

இதில் உடலில் பல்வேறு வகையான புற்றுநோய்கள், தலை, கழுத்து, கடைபெருங்குடல், மூளை, வயிறு, வெள்ளையணு பிளாஸ்மா, ரத்தத்தில் சேரும் தேவையற்ற செல்களின் வளர்ச்சி, கணைய புற்றுநோய், கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற 14 வகை புற்றுநோய்க்கு தலா ஒவ்வொன்றுக்கும் 7 விளக்கங்கள் தரப்ட்டுள்ளன.
புற்றுநோய்க்கான காரணிகள், சிகிச்சை முறை, வருமுன் காக்கும் முறைகள், தடுப்பு முறைகள் பற்றி இடம்பெற்றுள்ளன.
மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் வரும் 4-ம் தேதி தொடங்கும் விந்தகப்பை சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் பரிசோதனை மற்றும் அல்ட்ராஸ்கேன் சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை மாதம் முழுவதும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.