Thursday , September 19 2019
Home / Business / வணிகர்கள், மின்னணு பொருளாதாரம் மற்றும் வாடிக்கையாளர்களை பாதிக்கும் ஆர்பிஐ யின் திருத்தப்பட்ட வணிகர் தள்ளுபடி விகிதங்கள் – எம்டிஆர் (MDR)

வணிகர்கள், மின்னணு பொருளாதாரம் மற்றும் வாடிக்கையாளர்களை பாதிக்கும் ஆர்பிஐ யின் திருத்தப்பட்ட வணிகர் தள்ளுபடி விகிதங்கள் – எம்டிஆர் (MDR)

இந்திய ரிசர்வ் வங்கியின் டிசம்பர் 6, 2017 அறிவிப்பின்படி பெரும் சில்லறை வணிக கடைகளில் நடைபெறும் டெபிட் கார்ட் பரிவர்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதத்தை (எம்டிஆர்) 0.5% (ஒவ்வொரு பரிவர்த்தனை) லிருந்து 0.9% (ரூ. 1000 மிகாமல்) என திருத்தம் செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் பாய்ண்ட் ஆப் சேல்ஸ் இயந்திர ங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதனால் டெபிட் கார்டுகளுக் கான மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் ( MDR) கட்டணங்களை முறைப்படுத்துவது முக்கியமா னது என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போதுள்ள சில்லறை வணிகத்தில், குறிப்பாக சிறப்பு அங்காடிகளிலும் உயர் அங்காடிகளில் வெறும் 2% – 3% ஆதாயமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது போன்ற எம்டிஆர் ஏற்றத்தால், விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாகவும் அமையும்.
தற்போதைய மின்னணு பொருளாதாரத்தில், குறிப்பாக, யூபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாகவும், ஐஎம்பிஎஸ், நெப்ட் மற்றும் ஆர்டிஜி பரிவர்த்தனை கட்டணங்களை கருத்தில் கொண்டால், டெபிட் கார்ட் பரிவர்த்தனைகளை இந்த அளவு கட்டணங்கள் விதிப்பது சரியான மதிப்பீடாக அமையவில்லை.

ஆர்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி, குமார் ராஜகோபாலன் கூறுகையில், “டெபிட் கார்டு பரிவர்த்தனைகள், வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை செலுத்துவதால், இதில் வழங்கு வாங்கியாளருக்கு வரவு இடர் எனும் கிரெடிட் ரிஸ்க் ஏதும் இல்லை. எனவே, இது போன்ற எம்டிஆர் விகிதங்களை உயர்த்துவது நியாயம் இல்லை. மேலும், எம்டிஆர் க்கு அதிகபட்ச அளவாக ரூ. 1000 என ஆர்பிஐ நிர்ணயித்துள்ளது, அதாவது பரிவர்த்தனை அளவு என்பது கிட்டத்தட்ட ரூ. 1.1 லட்சம் ஆகும். இது யதார்த்தமாக தோன்ற வில்லை.”

பிற நாடுகளில் உள்ள எம்டிஆர் விகிதங்களை பார்க்கும் போது, சீனாவில் இன்னமும் 0.2% ஆகவே உள்ளது. இது நடவடிக்கைகள் வங்கிகள் மற்றும் விசா – மாஸ்டர் போன்ற கார்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமையும். மேலும் மின்னணு பொருளாதாரம், வணிகர்களின் நலன்களை பாதிப்படைய செய்வது மட்டும்மல்லாது அது முடிவில் நுகர்வோருக்கே பெரும் சுமையை ஏற்படுத்தும்.
வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடையே டெபிட் கார்டு பயன்பாட்டினை ஊக்கப்படுத்த ஆர்பிஐ விரும்பினால், எம்டிஆர் கட்டணங்கள் ரூ. 40 க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
குறிப்பு : எம்டிஆர் என்பது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, வணிகர்கள் வங்கிக்கு செலுத்தும் கட்டண சதவீதம் ஆகும்.

குறிப்பு : இந்திய சில்லறை வணிகர்கள் சங்கம்

இந்திய சில்லறை வணிகர்கள் சங்கம் என்பது இந்திய சில்லறை வணிகர்களுக்கான ஒருங்கிணைந்த குரல் ஆகும். தங்களுடன் இணைத்தவர்களை கொண்டு இந்தியாவில் நவீன சில்லறை வணிகத்தை வளர்ச்சி பெரும் வகையில் சரியான சூழலை உருவாக்க பாடுபடும் அமைப்பாக திகழ்கிறது. இந்தியாவில் சில்லறை வணிகத்தை பாதுகாப்பதுடன் அரசாங்கம் சார்ந்த அனைத்து மட்டத்திலும் இணைந்து சில்லறை வணிகத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் பணித்துறை வாய்ப்புகள் ஏற்படுத்துதல், சில்லறை வணிகத்தில் முதலீடுகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை மற்றும் தொழில் போட்டிகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

குமார் ராஜகோபாலன் தலைமை நிர்வாக அதிகாரி, இந்திய சில்லறை வணிக சங்கம

 

திரு குமார் ராஜகோபாலன், இந்திய சில்லறை வணிக சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவர், இந்தியாவில் நவீன சில்லறை விற்பனைக்கு நேர்மறை சூழலை உருவாக்க தீவிர முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்.
சில ஆண்டுகளாக, திரு குமார், இந்தியாவின் சில்லறை விற்பனை துறைக்கான ஆர்ஏஐ அமைப்பின் குரலாக விளங்குவதுடன் சில்லறை வணிகத்தை சார்ந்தவர்களுடனும் பல்வேறு மட்டத்திலான அரசு துறைகளுடனும் இணைத்து செயல்பட்டு வருகிறார். இத்துறையில் உள்ள வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளையும் முதலீடுகளையும் மேம்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளையும் தொழிற் போட்டியினையும் உறுதிசெய்கிறது.
திரு குமார், ரீடைலர்ஸ் அசோசியேஷன்ஸ் ஸ்கில் கவுன்சில் ஆப் இந்தியா (RASCI) அமைப்பின் இயக்குனர் ஆவார். இவர், ஏஇயோன் கிரெடிட் சர்வீஸ் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலும் உள்ளார்.
திரு குமார், தனது 28 ஆண்டு அனுபவத்தில் ஐபிஎம் போன்ற நிறுவனங்களின் சில்லறை வணிக தீர்வுக்கான தேசிய தலைவரா பணியாற்றியுள்ளார். இவரது பணியில் ஐபிஎம் நிறுவனத்தின் பல்வேறு பொருட்களை தேசிய அளவில் முதல் தரத்தில் உயர்த்தி ஒட்டுமொத்த விற்பனையினை திறம்பட செயல்படுத்தியுள்ளார்.
“கிராஸ்ஒர்ட் புக் ஸ்டோர்ஸ்” நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் முதன்மை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். திரு குமார், தனது முதல் சில்லறை விற்பனை பணியினை ஷாப்பர்ஸ் ஸ்டாப் பில் தொடங்கினார். தனது 13 வருட பணியில், நிதி மற்றும் சிஸ்டம்ஸ் தலைவர், செயல்பாட்டு தலைவர், ஆடை சாரா மெர்ச்சண்டைஸிங் தலைவர், தலைவர் – சலுகைகள் பார்கைன்ஸ் நிறுவனத்திற்கான தலைவராக பணியாற்றியுள்ளார்.
திரு குமார், பல்வேறு அமைப்புகளிலும், தொழில் அமைப்புகளுடன் இணைந்து சில்லறை வணிகத்தை மேம்படுத்தி வருகிறார். இவர் பல்வேறு வணிக கல்வி நிறுவனங்களுக்கு வருகை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் சில்லறை வணிகம் மற்றும் அதனை சார்ந்த துறைகள் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் டான திரு குமார், தனது பணியின் தொடக்க காலத்தில மேலாண்மை ஆலோசகர், வரிவிதிப்பு, தணிக்கை மற்றும் பெருநிறுவன விஷயங்களில் சிறந்து விளங்கினார்.

மேலும் தனது பல ஆண்டுகள் வெற்றி அனுபவத்தில் தொழில் தொடங்குவோருக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறார்.

About Admin

Check Also

Udemy Announces Launch of Udemy for Business in India

Chennai, September , 2019:  Udemy, the global marketplace for learning and teaching online, today announced the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.