Sunday , June 24 2018
Home / Tamilnadu Police / 164 கிலோ மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள்.ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

164 கிலோ மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள்.ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக ப்பி-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.09.2017) கொடுங்கையூர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  கிருஷ்ணமூர்த்தி நகர், ராமகிருஷ்ணா தெரு, எண்.1 என்ற முகவரியில் உள்ள வீட்டை சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை பெருமளவில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.   அதன் பேரில் தடை செய்யப்பட்ட மாவா மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த                         1.கிஷோர், வ/47, த/பெ.கிரிசந்திரன், ராமகிருஷ்ணா தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், கொடுங்கையூர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து  164 கிலோ  எடையுள்ள மாவா மூலப்பொருட்கள், 1 எடை மெஷின், 1 மிக்ஸி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்ட கிஷோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *