Saturday , November 17 2018

நிறுவனத்தின் பங்குதாரரை நம்பிக்கை மோசடி மற்றும் கூட்டு சதி செய்து ஏமாற்றி 33 ஏக்கர் நிலத்தை (தற்போதைய மதிப்பு சுமார் ரூபாய் 200 கோடி) தன் குடும்பத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 நபர்களுக்கு 6 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு .

நண்பகளாகிய திரு. ஹமீது, திரு.ரபீப் மற்றும் திரு.தன்ராஜ் கோசர் ஆகிய மூவரும் D.R.Foundation and Estate Pvt., Ltd. என்ற பெயரில் கட்டுமான தொழில் செய்து வந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 2004ம் வருடம் சிறுசேரி மற்றும் செம்மஞ்சேரியில் நிலங்கள் வாங்குவதற்காக முடிவு செய்து, தன்ராஜ் கோசர் மூலம் சுமார் 33 ஏக்கர் நிலங்களை வாங்க ஹமீது அதற்கான பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், மேற்படி நிலத்தை தங்களது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்ய எடுத்த முடிவுக்கு எதிராக, எதிரி தன்ராஜ் கோசர் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் பதிவு செய்து, பின்னர் அந்த நிலங்களை தனது மகன்கள் மற்றும் மருமகள்கள் பெயரிலும் பதிவு செய்து நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்.

பின்னர் இது பற்றி விபரம் தெரிந்த ஹமீது கடந்த 2006ம் ஆண்டு ஜெ-9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் மேற்கண்ட எதிரிகள் மீது ஆலந்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலமோசடி வழக்கு என்பதால் இவ்வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி சிறப்பு பிரிவிற்கு கடந்த 2007ம் ஆண்டு மாற்றப்பட்டு, நில மோசடி தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ஆலந்தூர் நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 11 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த மேற்படி வழக்கில் விசாரணை முடிந்து இன்று (01.11.2017) தீர்ப்பு வழங்கப்பட்டது. நம்பிக்கை மோசடி மற்றும் கூட்டு சதி செய்த குற்றவாளிகளான எழும்பூரைச் சேர்ந்த 1.தன்ராஜ் கோசர், வ/72, த/பெ.நேமிசந்த், அவரது மகன்கள் 2.இந்தர்சந்த் கோசர், வ/52, 3.சுரேஷ் குமார் கோசர், வ/50, 4.ரமேஷ் குமார் கோசர், வ/40, மருமகள்கள் 5.சரளா, பெ/வ.52 க/பெ.இந்தர்சந்த் கோசர், 6.அனிதா, பெ/வ.50, க/பெ சுரேஷ் குமார் கோசர், 7. ராஜ்குமாரி, க/பெ ரமேஷ் குமார் கோசர், பேரன் 8.ஜிதேஷ் குமார் கேசர், வ/30, த/பெ.இந்தர்சந்த் கோசர் .ஆகிய 8 பேருக்கும் 6 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/- அபராதமும் விதித்து ஆலந்தூர் நீதிமன்ற நடுவர் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

About Admin

Check Also

புனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், வ/19, த/பெ.ராமலிங்கம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.