Saturday , November 25 2017

கோவை –  கோவை  ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி  கல்லூரியில் “மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017” என்ற நிகழ்ச்சியை மெகநெட்  விளம்பர நிறுவனம்  மற்றும் கோவை மீடியா அசோசியேசன் சார்பில்  நடைபெற்றது.  இவ்விழாவில் நடிகை ஓவியா கலந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி கூறி மகிழ்வித்தார். நடிகை  ஒவியாவிற்கு  மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017 விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டார்.
          செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தனக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும், மேலும், பட வாய்ப்புகளும் கிடைப்பதாகவும் கூறினார். தற்போது, காஞ்சனா படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.
                  தன்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்காக நிச்சயம் எதாவது விரைவில் செய்வேன் எனக் கூறிய ஓவியா, அரசியலை சிலர் பணம் மற்றும் புகழுக்காக பயன்படுத்துவதாகவும், புகழ் மற்றும் பணம் கொண்ட கமல் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு தனது ஆதரவு நிச்சயம் உண்டு என தெரிவித்தார். மேலும், ரஜினி பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாததால், கமலுக்கே தனது ஆதரவு எனவும் அவர் கூறினார்.

About Admin

Check Also

Dulux Velvet Touch Autograph Collection

Salem September 2017 AkzoNobel, the leading global Paints and Coatings Company and the makers of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *