Saturday , August 18 2018

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக எஸ்-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (20.9.2017) ஆதம்பாக்கம், எம்.ஆர்.டி.எஸ் சாலை அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது அங்கு 5 நபர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட   புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 1.ராம்தேவ்தாத்தி, வ/28, த/பெ.தசரத்தாத்தி, எண்.2/4, காந்தி தெரு, கொட்டிவாக்கம் 2.கிருஷ்ணகுமார் தாத்தி, வ/22, த/பெ.குலோதாத்தி, கொட்டிவாக்கம் 3.பவன்குமார், வ/24, த/பெ.அஜித்சிங், கொட்டிவாக்கம் 4.பப்லுதாத்தி,வ/26, த/பெ.பீம்தாத்தி, கொட்டிவாக்கம்  5.அமுல்ராஜ், வ/35, த/பெ.அலெக்ஸாண்டர், எண்.60/90, டாக்டர் அம்பேத்கர் நகர், ஆதம்பாக்கம் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து   80 கிலோ ஜர்தா பாக்குகள், 4 கிலோ மாவா, 3 கிரைண்டர்கள், பணம் ரூ.2,200/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இ-3 தேனாம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (20.09.2017) மதியம் 8.30 மணியளவில் தேனாம்பேட்டை, பீஷ்மன் நரசிம்மன் தெருவில்  கண்காணித்த போது அங்கு இரண்டு நபர்கள் தடை செய்யப்பட்ட மாவாவை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.அதன் பேரில் தடை செய்யப்பட்ட மாவாவை விற்பனை செய்த 1.சத்ருகன், வ/35, த/பெ.சுபீத், நுங்கம்பாக்கம் வ/35, 2.செல்வம், வ/30, த/பெ.காசிநாதன், ஆயிரம்விளக்கு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ ஜர்தா பாக்குகள், 2 கிரைண்டர்கள்,             3 செல்போன்கள் மற்றும் ரூ.3,700/- பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்-6 குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று (20.09.2017) மதியம் குமரன் நகர், ஆர்.வி.நகர், 67 வது தெரு பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த பெண் கனகலெட்சுமி, வ/45, க/பெ.ராஜ்குமார், எண்.24, ஆர்.வி.நகர், ஜாபர்கான்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 160 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

செம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல்.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.