Tuesday , October 17 2017
Home / Tamilnadu Police / கொடுங்கையூர் பகுதியில் வாலிபரை தாக்கி இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் சிறுவன் உட்பட 4 நபர்கள் கைது.

கொடுங்கையூர் பகுதியில் வாலிபரை தாக்கி இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் சிறுவன் உட்பட 4 நபர்கள் கைது.

சென்னை, வியாசர்பாடி, சர்மா நகர், 7 வது தெரு, எண்.145 என்ற முகவரியில் சாமுவேல்,வ/23, த/பெ.தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 17.09.2017 அன்று வியாசர்பாடி, எம்.கே.பி நகர், 5 வது மெயின்ரோட்டில் தனது நண்பர் ராஜ்குமார் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுவன் உட்பட நான்கு நபர்கள் சாமுவேலின் நண்பர் ராஜ்குமாரை கட்டாயப்படுத்தி போதை மாத்திரையை சாப்பிடச் சொல்லி கொடுத்துள்ளனர். இதனை சாமுவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு நபர்களும் மேற்படி சாமுவேலை தாக்கியுள்ளனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக சாமுவேல் பி-5 எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பி-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.ரஞ்சித், வ/18, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொடுங்கையூர் 2.அஜித்குமார், வ/19, த/பெ.ரமேஷ், எண்.9, கண்ணன் தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், கொடுங்கையூர் 3.லியோதினேஷ், வ/20, த/பெ.செபஸ்டின், எண்.13/2, சென்ட்ரல் அவென்யூ, எம்.கே.பி நகர், வியாசர்பாடி 4.அந்தோணி சாமுவேல், வ/27, த/பெ.லூர்துசாமி, எண்.363, 9 வது தெரு, எம்.கே.பி நகர் , வியாசர்பாடி ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவன் ரஞ்சித் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மற்ற மூன்று நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை ஆட்டோவில் எடுத்து வந்த இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *