Monday , February 19 2018



தூய்மையே சேவை இயக்கம் என்னும் திட்டத்தை சேலம் மாவட்டத்தில்  மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக துவக்கி வைத்தார்கள்.  இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள்  சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மையே சேவை இயக்கத்தினை துவக்கி வைத்தார்.  இதன் தொடர்ச்சியாக   சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தூய்மையான மருத்துவமனைகள் தரமான சேவை என்பதை வலியுறுத்தி தூய்மை பணிகளை துவக்கி வைத்தார்.தூய்மையே சேவை இயக்கம் என்னும் திட்டத்தை சேலம் மாவட்டத்தில்  மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக துவக்கி வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள்  சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மையே சேவை இயக்கத்தினை துவக்கி வைத்தார்.  இதன் தொடர்ச்சியாக   சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தூய்மையான மருத்துவமனைகள் தரமான சேவை என்பதை வலியுறுத்தி தூய்மை பணிகளை துவக்கி வைத்தார். அப்போது பேசிய  அமைச்சர் அவர்கள் மக்கள் நோய்களின்றி வாழ்வதற்கு சுற்றுப்புற தூய்மை மிகவும் முக்கியம். தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மையான மருத்துவமனைகள், தரமான சேவைகள் என்னும் திட்டம் அறிமுகம் செய்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உன்னதமான மருத்துவ சேவையோடு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளவேண்டும். கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மேற்கொள்ளப்படும் இப்பணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இம்மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மனிதநேயத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி வருவதால் கடந்த 3 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட மனநல நோயாளிகள் சிகிச்சை முடிந்து நலமுடன் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.  கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகள் மலர்கொத்து தயாரித்தல், கூடை பின்னுதல், பிரட் தயாரித்தல் ஆகியவற்றுடன் தோட்டங்கள் பராமரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு யோகா மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

மனநல சேவையில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 32 மாவட்டங்களிலும் மாவட்ட மன நலத் திட்டம் (னுளைவசiஉவ ஆநவேயட ழநயடவா ஞசடிபசயஅஅந) தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவது வரலாற்று சாதனையாகும். மேலும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசால் வேலூர், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் மனநல சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.  இதன் மூலம் தமிழகத்தில்  மன நல சேவை  மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர்  மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர்             மரு. க. குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. எ. எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஆர். நாராயணபாபு, அரசு மனநல காப்பக இயக்குநர் மரு. சாந்தி நம்பி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

கோவையில் புதிய தார்ச்சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி சாலையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்… கோவை மாநகராட்சி பகுதிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *