Friday , June 22 2018

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பேக்கரும்புவில் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், மறைந்த டாக்டர் ஹ.ஞ.து. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், அவரது நினைவு மண்டபத்தை, பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்துவிட்டு, டெல்லி திரும்புவதற்காக, மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, கழகப் பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வழி அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர்கள் திரு. மு.ஞ.முனுசாமி, திரு. நத்தம் இரா.விசுவநாதன், னுச. வா.மைத்ரேயன்,ஆ.ஞ., முன்னாள் அமைச்சர்கள் திரு. செ.செம்மலை,எம்.எல்.ஏ.,  திரு. மாஃபா. க. பாண்டியராஜன்,எம்.எல்.ஏ.,
திரு. சு.ளு. ராஜகண்ணப்பன் திரு. ஞ.ழ. மனோஜ்பாண்டியன்,நுஒ.ஆ.ஞ., மற்றும்
கழக நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தார்கள்.

About Admin

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *