Tuesday , August 21 2018
Home / District-News / 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100ரூ தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் காசோலைகளை அமைச்சர் வழங்கினார்கள்.

12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100ரூ தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் காசோலைகளை அமைச்சர் வழங்கினார்கள்.

Photo-2பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ்
32 சென்னை மேல்நிலைப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2580 மாணவர்கள், 3843 மாணவியர்கள் என மொத்தம் 6423 மாணவ / மாணவியர்கள் தேர்வு எழுதினர். அதில் 2085 மாணவர்கள், 3615 மாணவியர்கள் என மொத்தம் 5700 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். இதுகடந்த ஆண்டை விட 2.5 சதவீதம் கூடுதல் ஆகும்.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100ரூ தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் காசோலைகளை
இன்று (12.05.2017) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
நடப்பு தேர்வு வெளியீட்டில்,
100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளிகள் .. 2
1. சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மார்க்கெட் தெரு, பெரம்பூர்
2. சென்னை மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி. நகர்

மேலும்,
200/200 மதிப்பெண் பெற்ற மாணவ/மாணவிகள் .. 119
(கடந்த ஆண்டு 51 மாணவ, மாணவியர்கள் 200/200 மதிப்பெண்கள் பெற்றனர்.)
ஆயிரத்தி நூற்றுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் .. 136
ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் .. 524
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., துணை ஆணையர் (கல்வி) திரு.எம்.கோவிந்த ராவ், இ.ஆ.ப., கல்வி அலுவலர் திருமதி.டி.ரஞ்சனி, கூடுதல் கல்வி அலுவலர் திரு.டி.சுப்பிரமணியன் மற்றும் உதவி கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Ragavendhar

Check Also

கோவை போக்குவரத்து காவல்துறை – கருண்யா கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு முகாம்

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையும், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து சிந்தாமணி பகுதியில் உள்ள சிக்னல் முன்புறம் …