Wednesday , July 17 2019
Home / EDUCATION / ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கருத்தரங்கம்.

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கருத்தரங்கம்.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை வணிக ஆய்வு மற்றும் அறிவு என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கினை இக் கல்லூரியில் நடத்தியது.

இதில் இன்டெர்க்ளோபல் லாஜிஸ்சொலுஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்க அதிகாரி திலீப் ஆப்ரகாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருதரங்கத்தை தொடங்கிவைத்து உரை ஆற்றினார்.

இதில் இவர் பேசியபோது ஆய்வுக்கு உட்பட்ட மற்றும் அறிவுபூர்ணமான வர்த்தக முறையே இனி வரும் காலத்தில் வர்த்தக மற்றும் வணிக முறையில் வரும். வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் கண்டிப்பாக தொழில்நுட்பத்திறனை வர்த்தக பரிமாற்றத்தில் இனைக்க வேண்டும். பாரம்பரிய வர்த்தக முறையினை இக் காலத்தில் இனிமேல் பயன்படுத்த முடியாது. உலகில் தயாரிக்கும் பொருள்கள் எந்த இடத்திலும் பெறும் முறைதான் இனிமேல் பயன்படும். தொழில்நுட வளர்ச்சி படிக்காத மக்களிடையே சென்று உள்ளது .எனவே இனிமேல் வர்த்தக மற்றும் வணிக பரிமாற்றத்தில் தொழில்நுட்ப முறையினை கட்டாயமாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம். கணனியின் பயன்பாடு வர்த்தகத்தில் முழுமையாக சேர்க்கும் நேரம் வந்து விட்டது. இப்பொழுது வர்த்தகத்தினை ஆராய்ந்து செய்ய புதிய நுட்பம் வந்து விட்டது. எந்த பொருளினை தாயரிக்கும் முன் ஆய்வு செய்து தயாரிக்க வேண்டும். மக்கள் மனதில் எந்த பொருளினை வேண்டி நினைக்கின்றனர் என்பதனை அறிந்து வியாபாரம் செய்ய வேண்டும். தொழில்நுட்ப ஆய்வு வர்த்தகத்தில் மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்த உள்ளது எனக் கூறினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை பேராசிரியர் ஹேமேந்திர குமார் டங்கி கலந்து கொண்டு உரை ஆற்றினார். இதில் இந்திய அளவில் 500 கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பங்கேற்றனர். 50க்கும் மேற்றப்பட்ட ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

இந்த கருத்தரங்கினை இக் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பி.பேபி ஷகிலா தலைமையேற்று தொடங்கிவைத்தார்.

இத் துறையின் தலைவர்கள் முனைவர் சுமதி,அன்புமலர், சந்தானலட்சுமி,விஜிமோல்,ராதாகிருஷ்ணன், தனலட்சுமி, கவுசல்யா , பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள்,
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

About Admin

Check Also

SRMIST inaugurates the forth edition of T-Summit

SRM Institute of Science and Technology, Kattankulathur, July 12: Ace nuclear physicist Rajagopala Chidambaram considered …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.