Monday , September 24 2018
Home / State-News / ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

கோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1998 – 2002 கல்வியாண்டின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா தலைமை வகித்தார். இக்கல்வி நிறுவனங்களின் கல்வித்துறை இயக்குநர் டி.ஏ.எபினேசர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விழா சிறப்பு மலரை ராமகிருஷ்ணா வெளியிட அதை முதல்வர் என்.ஆர்.அலமேலு பெற்றுக்கொண்டார். கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.2 லட்சத்துக்கானகாசோலையை முன்னாள் மாணவர்கள் வழங்கினர். முன்னாள் மாணவர்களில் சிறந்த தொழில்முனைவோராக விளங்குவோருக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிருந்த வந்திருந்த சுமார் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படம்
ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் விழா மலரை தலைமை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா வெளியிட்ட போது எடுத்தப்படம்.

About Admin

Check Also

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.