Wednesday , December 12 2018
Home / Business / ஸ்மார்ட் போன்களில் U சீரியஸை உங்களுக்காக பெருமிதத்தோடு அறிமுகப் படுத்துகிறது HTC

ஸ்மார்ட் போன்களில் U சீரியஸை உங்களுக்காக பெருமிதத்தோடு அறிமுகப் படுத்துகிறது HTC

HTC U Ultra_Sapphire Blue 2

HTC U PLAY Iceberg White-4
மொபைல் போன் மற்றும் virtual reality தொழில் நுட்பத்தில் ஒரு முன்னணி கண்டுபிடிப்பாளராக இருக்கும் HTC கார்ப்பரேஷன் இன்று HTC U Ultra மற்றும் the HTC U Play ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த போன்கள் புத்திசாலித்தனமானது, தனித்துவமானது, வசதியானது, பளபளப்பானது மற்றும் எல்லா சிறப்பு அம்சங்களும் ஒருங்கே பெற்று வசீகரமான தோற்றம் கொண்டது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் 3D டெக்னாலஜி, liquid surface, கேட்பதற்கு வசதியான HTC U sonic technology, பார்ப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் வசதியான MegaPixel மற்றும் UltraPixel camera, கூடுதலாக vivid light, மற்றும் வண்ணங்கள் என பல கூடுதல் சிறப்புகள் அமையப் பெற்றிருக்கிறது. HTC U அல்ட்ரா விலை. 59,990 ரூபாய் மற்றும் HTC U PLAY விலை. 39,990 ரூபாய்.

இன்னொரு சிறப்பு அம்சமாக HTC U அல்ட்ரா மற்றும் HTC U இரண்டு போன்களுக்கும் ஒரு வருட காப்பீட்டு திட்டம் உண்டு. இதன் மூலம் இரண்டு போன்களையும் திரவத்தால் ஏற்படும் சேதங்கள் மற்றும் உடல் செதங்களில் இருந்து நிவாரணம் பெறலாம். நீங்கள் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்து டெபிட் அல்லது கிரடிட் கார்டு மூலமாக இந்த இரண்டு மொபைல்களை வாங்கினால், தலா இரண்டு மொபைலின் மார்க்கெட் விலையில் இருந்து 7.5 சதவிகிதத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அரிய வாய்ப்பு மார்ச் 6ம் தேதியில் இருந்து, மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். HTC U அல்ட்ரா மற்றும் HTC U PLAY இந்த இரண்டு போன்களும் முறையே மார்ச் 6ம் தேதியில் இருந்தும், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்தும் இந்திய மார்க்கெட்டில் கிடைக்க ஆரம்பிக்கும்.
புதிய இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்திய HTC தெற்கு ஆசியாவின் பிரசிடென்ட் திரு. ஃபைசல் சித்திக் பேசும்போது, ‘’இந்த HTC U சீரியஸின் அறிமுகம் ஒரு தொடக்கம் மட்டுமே. இதை தொடர்ந்து பல புதிய, ஆச்சரியம் அளிக்க கூடிய மொபைல் போன்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகம் ஆக இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பிடிக்கும் வகையில், மக்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக வடிவமைப்பு, தரம், HD தகவமைப்பு, ஆடியோ மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் ஆகியவற்றில் பெரும் வசதிகளை கொடுக்க நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

HTC U அல்ட்ரா மொபைலில் இரண்டு DISPLAY வசதியோடு, U SONIC மற்றும் குரல் அறிதல் வசதி பொருத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சிறப்பாக BoomSoundTMHi-Fi edition ஸ்பீக்கர்கள், 16MP UltraPixelTM கேமராவோடு, 12MP UltraPixel மெயின் கேமராவும் இணைந்து HTC U ULTRA போனை சிறப்பாக்குகிறது. இந்த வசதியால், மிகக் குறைந்த தெளிவின்மை, வேகமாக கவனம், சிறந்த புகைப்படங்களை இரவிலும் கூட எடுக்க முடியும். HTC U Ultra மற்றும் U Play ஆகிய இரண்டு போன்களும் 64GB memory வசதி கொண்டவை. HTC U Ultra போன் ஆனது பிரில்லியன்ட் பிளாக், காஸ்மிக் பிங்க் மற்றும் சபையர் ப்ளு ஆகிய மூன்று வசீகர வண்ணங்களில் கிடைக்கிறது. HTC U Play போன் ஆனது 5.2” இன்ச் டிஸ்ப்ளேயோடு, 16MP and UltraPixelTM முன் காமிராவோடு அட்டகாசமான செல்பி எடுக்க வசதியோடு உங்களுக்காக காத்திருக்கிறது. HTC U Play வெள்ளை, இண்டிகோ ப்ளு, ப்ளாக் ஆயில், காஸ்மிக் பிங்க் கோல்டு ஆகிய புத்துணர்ச்சியான வண்ணங்களில் இந்திய சந்தையில் கிடைக்கிறது.

About Ragavendhar

Check Also

Free Shopping Weekend is back at your nearest Brand Factory store

Brand Factory, thelifestyle discount store byFuture Lifestyle Fashion is back with the much-awaited sale of …