Wednesday , March 20 2019
Home / District-News / வேளாண் உபகரங்கள் வாங்க மானியத்துடன் கடன் வசதி உள்ளது

வேளாண் உபகரங்கள் வாங்க மானியத்துடன் கடன் வசதி உள்ளது

மின் மோட்டார், பைப்லைன், நீர்தேக்கதொட்டி உள்ளிட்ட வேளாண் உபகரங்கள் வாங்க மானியத்துடன் கடன் வசதி உள்ளது என, வேளாண் நீர்வடிப்பகுதி துணை இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசனம்(கறுப்பு பைப்) திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் மின்மோட்டார், ஆயில் இன்ஜின், நீர்ப்பாசன குழாய்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் வழங்கப்படுகிறது.
இதில், சில விவசாயிகள் முன் பணம் வைத்து வேளாண் உபகரணங்ள் வாங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர்க்க, வங்கி கடனுதவியுடன், மானியம் பெற்றுத்தரப்படும். இதற்கு, பஞ்சுப்பேட்டை வேளாண் நீர் வடி பகுதி மேம்பாடு முகமை துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என, துணை இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.

About Admin

Check Also

SRMU conducts “Black Badge Demonstration”

Chennai, March : As per the decision of National Joint Council for Action (NJCA) comprising …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.