Saturday , September 21 2019
Home / Tamilnadu Police / வேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்

வேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின் போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்தி, குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சென்னை பெருநகர் முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார். அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (22.2.2019) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் ஜெ-7 வேளச்சேரி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கிண்டி, புனிததோமையர்மலை, மீனம்பாக்கம், நீலாங்கரை சரகங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 1362 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் காவலர்களுக்காக காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள் அரங்கு இறகு பந்து விளையாட்டு மைதானத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் வேளச்சேரி டி.என்.எச்.பி காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாய்ஸ்கிளப் கட்டிடம் மற்றும் போலீஸ் பூத் ஆகியவற்றையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு கூடுதல் காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஷ்வரி, இ.கா.ப., புனித தோமையர்மலை துணை ஆணையாளர் திரு.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அடையார் துணை ஆணையாளர் திரு.சேஷாங்சாய், இ.கா.ப, உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.