Friday , February 23 2018
Home / Tamilnadu Police / வேப்பேரி பகுதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த இரண்டு நபர்கள் கைது.
Illustration of a police station building on a white background

வேப்பேரி பகுதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ழு-1 வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் நேற்று (1.2.2018) நேவல் மருத்துவமனை சாலை அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது ஒருவர் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் இரண்டு நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1. சதீஷ் வ/27, த/பெ.பிரேம்குமார், எண்.23, 1வது லேன், பெரியமேடு 2.பரத், வ/25, த/பெ.அரசு (எ) சிவகுமார், எண்.8, 1வது தெரு, நேவல் ஹாஸ்பிடல் ரோடு , பெரியமேடு என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 அடி நீளமுள்ள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட பரத் வேப்பேரி காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

கே.கே.நகரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், பகுதியில் உள்ள பிளாட்பார்மில் ஜெயகுமார் (எ) குமார், வ/45, த/பெ.குள்ளகுமார் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *