Saturday , June 23 2018
Home / Tamilnadu Police / வில்லிவாக்கம் மற்றும் சூளைமேடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது.

வில்லிவாக்கம் மற்றும் சூளைமேடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஏ-1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (13.02.2018) மதியம் வில்லிவாக்கம் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வெள்ளாள தெருவில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒரு நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த லட்சுமணன், வ/58, த/பெ.நடேசன் செட்டியார், எண்.34/22, வெள்ளாள தெரு, வில்லிவாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.270/-, செல்போன்-1 மற்றும் துண்டு சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, கு-5 சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (13.03.2018) மதியம், அண்ணா நெடும்பாதை பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த ஷேக் தாவூத், வ/32, த/பெ. பீர்முகமது, எண்.5/3, பாரி தெரு, சூளைமேடு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.11,250/- செல்போன் மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *