Friday , January 19 2018
Home / Tamilnadu Police / விருகம்பாக்கம் பகுதியில் தனியார் ஓட்டலில் சட்டவிரோதமாக “மது பார்” நடத்திய ஓட்டல் மேலாளர் உட்பட இரண்டு நபர்கள் கைது.

விருகம்பாக்கம் பகுதியில் தனியார் ஓட்டலில் சட்டவிரோதமாக “மது பார்” நடத்திய ஓட்டல் மேலாளர் உட்பட இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சு-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (12.01.2018) இரவு சுமார் 09.45 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாலிகிராமம், ரத்னம்பாள் காலனி, அண்ணா தெருவில் உள்ள தனியார் ஓட்டலை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சட்ட விரோதமாக மதுபார் நடத்தி வந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக மது பார் நடத்திய தனியார் ஓட்டலின் மேலாளர் 1. ஆஷீஸ், வ/32, த/பெ.ஆடிசர்மா, எண்.124 ஏ, பாலாஜி நகர், கேம்ப் ரோடு, சேலையூர் 2.பழனி, வ/35, த/பெ.நடராஜன், எண்.12, மூர்த்தி அவென்யூ, லட்சுமி நகர், போரூர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 48 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ராயப்பேட்டை பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாடிய 32 நபர்கள் கைது.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *