Tuesday , August 21 2018
Home / Tamilnadu Police / வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது. பணம் ரூ.86,150/- மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல்

வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது. பணம் ரூ.86,150/- மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல்

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ஆர்-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.11.2017) மதியம் சுமார் 12.00 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோடம்பாக்கம், வெள்ளாள தெரு, எண்.60 என்ற முகவரியிலுள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்படி கிளப்பின் மேற்பார்வையாளர் சுபாஷ், வ/55, த/பெ.லோகய்யா, எண்.19, தேசிகர் தெரு, வடபழனி, சென்னை என்பவர் உட்பட 26 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.81,140/- மற்றும் சீட்டுக்கட்டுகள் – 20 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, ஆர்-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.11.2017) இரவு சுமார் 09.00 மணியளவில் கண்காணிப்பு பணியிருந்தபோது, எண்.73, பாஸ்கர் காலனி 3வது தெரு, விருகம்பாக்கம், சென்னை-92 என்ற முகவரியிலுள்ள வீட்டின் ஒரு அறையில் சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சூர்யா, 48, த/பெ.வெள்ளை பாண்டி, சாலிகிராமம், சென்னை-92, மோகன், வ/60, த/பெ.முனுசாமி, சாலிகிராமம் உட்பட 9 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.5,010/- மற்றும் சீட்டுக்கட்டுகள் – 3 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

செம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல்.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.