Saturday , October 20 2018
Home / Tamilnadu Police / வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் (06.8.2018) மேற்படி அசோக் தெருவில் 3 நபர்கள் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கல்லால் அங்கிருந்த கனரா வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவின் மீது வீசினர். இதில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததன்பேரில், ளு-9 பழவந்தாங்கல் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு தகராறில் ஈடுபட்டு ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்த 3 பேரை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.எழில்ராஜ், வ/22, (வேன் ஓட்டுநர்) த/பெ.ரங்கதுரை, எண்.3/2, 1வது குறுக்கு தெரு, பி.வி.நகர், பழவந்தாங்கல், சென்னை, 2.சுகுமார், வ/22, (ஆட்டோ ஓட்டுநர்) த/பெ.ரமேஷ்பாபு, எண்.23/22, சிற்றரசு தெரு, உள்ளகரம், சென்னை, 3.முருகன், வ/21 (வேன் ஓட்டுநர்), த/பெ.முத்துகுமார், எண்.27, நெரு நெடுஞ்சாலை, பி.வி.நகர், பழவந்தாங்கல், சென்னை என்பதும், 3 பேரும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது.

அதன்பேரில், எதிரிகள் எழில்ராஜ், சுகுமார் மற்றும் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

About Admin

Check Also

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாணவர்படை துவக்கவிழா

கோவை டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இணைந்து நடத்தும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாணவர்படை துவக்கவிழா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.