Monday , May 20 2019
Home / Tamilnadu Police / ரூ.1.25கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபர் கைது .
Illustration of a police station building on a white background

ரூ.1.25கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபர் கைது .

சென்னை-125, போரூர், மதனந்தபுரம், ராஜராஜேஸ்வரி நகர், நேதாஜி தெருவில் வசிக்கும், திரு.A.ஹரிகுமார், வ/46, த/பெ.தாமோதரன், என்பவருக்கு சொந்தமான சென்னை, போருர், காரம்பாக்கம் கிராமம், சர்வே எண் 122-ல் ரூ.1.25 கோடி மதிப்புள்ள சுமார் 2943 சதுரடி கொண்ட காலி மனையை ஆள்மாறாட்டம் மற்றும் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்ததாக புகார்தாரர் திரு. A.ஹரிகுமார், அவர்கள் கொடுத்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன். இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவில் தனிப்படை அமைத்து இவ்வழக்கில் தாமோதரன் போல் ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரித்த குற்றவாளி திலகர், ஆ/வ 59, த/பெ.ராமகிருஷ்ணன், எண்-2/640, 2வது பிளாக், முகப்பேர் மேற்கு, சென்னை-37 என்பவரை நேற்று (02.01.2019) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திலகர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்ததரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.