Tuesday , June 26 2018
Home / Tamilnadu Police / ரூ.1 கோடியே 50 இலட்சம் மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த 3 நபர்கள் கைது.

ரூ.1 கோடியே 50 இலட்சம் மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த 3 நபர்கள் கைது.

சென்னை ஆலப்பாக்கம், அஷ்டலெட்சுமி நகர், முதல் தெரு, எண்.63, என்ற முகவரியில் சிதம்பரம், வ/75, த/பெ.சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தைக்கு சொந்தமாக பள்ளிக்கரணை கிராமம் புல எண். 632, 637ல் அமைந்த காமகோடி நகர், மனைப்பிரிவு மனை எண் 225ல் ரூ. 1 கோடியே 50 இலட்சம் மதிப்புள்ள 3352 சதுர அடி காலி இடம் உள்ளது. மேற்டி இடத்தின் உரிமையாளர் சொக்கலிங்கம், ஜீவன் பவுன்டேசன் உரிமையாளரான பெரியசாமி என்பவருக்கு கிரைய பத்திரம் எழுதி கொடுத்ததாக சிலர் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டதாகவும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மேற்படி சிதம்பரம் காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஜீவன் பவுன்டேசன் உரிமையாளர் 1. பெரியசாமி, வ/39, த/பெ.மருதமுத்து, எண்.10/78, s-2 அஸ்வத் ஐஸ்வர்யா அபார்ட்மென்ட், விருகம்பாக்கம் 2. விக்னேஸ்வரன், வ/28, த/பெ அறிவழகன், எண். No.32/EA, மேட்டு தெரு, 8 வது குறுக்கு தெரு, திருவொற்றியூர் 3.ராஜேஸ்வரன், வ/35, த/பெ.பொன் வெங்கடாசலம், எண். 32/15, வினோபா நகர், தண்டையார்பேட்டை ஆகிய மூன்று நபர்களை இன்று (23.01.2018) கைது செய்தனர். மேலும் மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *